2023 Union budget tabled today

Advertisment

2023-24கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன்இன்று தாக்கல்செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட்டாகும். அடுத்தாண்டு நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளதால், இதுவே பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட். காகிதமில்லாமல் மடிக்கணினி மூலம் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத்தெரிகிறது.