Published on 08/09/2018 | Edited on 08/09/2018
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உப்பட பல மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மற்றும் பாராளுமன்ற தேர்தல் வியூகங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் அமித்ஷா வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளார்.