![200 crores for Tuticorin six lane project- Nitin Gadkari announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/lwTBocTvReeFrYPtKJk-sHn0iSOL8FQMyAxO2Z672ec/1679811222/sites/default/files/inline-images/nm11.jpg)
தூத்துக்குடி ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு 200 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று ஜம்மு-காஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான முக்கியமான சாலை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை நிதின் கட்கரி பகிர்ந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கான தூத்துக்குடி துறைமுகம் ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு 200 கோடி முப்பது லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு கிலோமீட்டர் வரைக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக ஆறு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. துறைமுகத்தை ஒட்டி அதனுடைய பொருட்கள் கொண்டு செல்வதற்கான அளவை அதிகரிப்பதற்காக இந்த ஆறு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் அதனுடைய மேம்பாட்டிற்காக நிதி இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.