தெலுங்கானாவில் டிராக்டர் வாய்க்காலில் கவிழ்ந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானாவிலுள்ள புவனகிரி மாவட்டம்யாதாத்ரி என்ற கிராமத்தில் விவசாய பணிக்காக 20-க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து சென்ற டிராக்டர் ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் 17 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று காலை விவசாய பணிகளுக்காக பெண்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த டிராக்டர் ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மாட்டின் மீது மோதவிருந்தது, அதை சுதாரித்த டிராக்டர் டிரைவர் உடனே வண்டியை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மறுபுறம் இருந்த ஓடையில் டிராக்டர் தடம்புரண்டுதலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த பெண்களில்17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.
இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் போலீசார் உடனடியாக சடலங்களை மீட்டு கரையில் சேர்ந்தனர்.இந்த விபத்தில் பலர் படும்காயமும் அடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியேசோகத்தில் ஆழ்ந்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள், குழந்தைகள்கதறும் காட்சிகள் மிகுந்த சோகத்தை தருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. அதேபோல் ஆந்திராவில் தனூர் மாவட்டத்தில் அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர்.