Skip to main content

படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி; மீதமுள்ளோரின் நிலை?

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

15 passed away including 4 children as boat sinks; What about the rest? Tension in Kerala

 

கேரள மாநிலம் மலப்புரத்தில் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற படகு சவாரியில் 40 பேர் பயணம் செய்த சுற்றுலா படகு திடீரென நீரில் மூழ்கியது. இதில் 30 பேர் நீரில் மூழ்கினர்.

 

நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 16 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் அடக்கம். படகின் அடியில் பலர் சிக்கி இருக்கலாம் என்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூறுகின்றனர். படகைக் கரைக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தனூர் பகுதியில் உள்ள ஒருவரது இல்ல விழாவிற்குக் கலந்து கொள்ள வந்தவர்கள் படகு சவாரி செய்ததும் அப்போது படகு கவிழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரியாஸ்கான் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். 10 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை விபத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரதமர் மோடி, கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் வெட்டிக் கொலை; விசாரணையில் திடுக் தகவல்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Marxist communist figure passed away in kerala

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் செருவட்டூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (62). இவர், கொயிலாண்டி நகர மத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், உள்ளூர் கமிட்டி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். 

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் (22-02-24) செருவட்டூர் அருகே முத்தாம்பி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு பங்கேற்பதாக சென்றார். இதனையடுத்து, அன்று இரவு நடந்த இசை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், தாங்கள் கொண்டுவந்த ஆயுதத்தால் சத்தியநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த சத்தியநாதன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள், சத்தியநாதனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கல், சத்தியநாதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சத்தியநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில்,  அபிலாஷ் (30) என்ற நபர், இந்த கொலை சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக காவல்துறையிடம் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அபிலாஷ் கொயிலாண்டி நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த போது, அவரை ஓட்டுநர் வேலையில் இருந்து நீக்கி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அபிலாஷுக்கு ஆதரவாக சத்தியநாதன் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த அபிலாஷ், சத்தியநாதனை கொலை செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து, கொயிலாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (23-02-24) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தியது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கேரளாவில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.