/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/144ni.jpg)
ராஜஸ்தான் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஐந்து காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் இரு சமூகங்களிடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று(21-06-24) திடீரென்று, அவர்கள் ஒன்று திரண்டு ஒருவரையொருவர் செங்கல் மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்கள் மீது தீ வைத்து எரித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்ற போது, அவர்களையும் மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், போலீசாரை தாக்கியதற்காகவும், கலவரத்தை தூண்டியதாகவும் பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள ஐந்து காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)