Skip to main content

தினமும் 14 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் - மத்திய அரசு எச்சரிக்கை!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

OMICRON

 

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது 91 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.

 

இந்தநிலையில், இந்தியாவிலும் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (17.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி 14 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும். பிரான்சில் 65,000 வழக்குகள் (ஒரேநாளில்) பதிவாகியுள்ளன. இந்தியாவிலும் இதேபோன்ற ஒரு பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, "இது அத்தியாவசியமற்ற பயணங்கள், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டிய நேரம். கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொள்வது முக்கியம்" என கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்; புறக்கணிக்கும் முதலமைச்சர்கள்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Niti Aayog meeting chaired by Prime Minister; Ignorant Chief Ministers

 

எட்டாவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் எனும் அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்ற முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி செயல்படுகிறார். ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பர்.

 

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணங்களால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான் கலந்துகொள்ளாதது குறித்து எந்த காரணமும் இதுவரை தெரிவிக்கவில்லை.

 

இவர்களைத் தவிர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகரராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

 

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். விக்சித் பாரத் @2047, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு உள்ளிட்ட 8 முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நிதி ஆயோக் அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக தரக்கூடாது; ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Do not over-prescribe antibiotics; ICMR alert

 

மக்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கே ஆன்டிபயாடிக் மருந்தினை மருத்துவர்கள் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 

ஆன்டிபயாடிக் மருந்துகள் உலகம் முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் கார்பெனம் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்து அதிகமான மக்களுக்கு பலனளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில், ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

 

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தருவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.

 

பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப் பரிந்துரைக்கப்படுகிறது.