Skip to main content

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!!

Published on 16/08/2018 | Edited on 17/08/2018

 

a

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று  (16.8.2018) காலமானார்.

 

மூட்டுவலி பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய்க்கு கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.  94 வயதாகும் வாஜ்பாய்க்கு வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.  நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் பலவீனமானது. சிறுநீரகங்களும் பலவீனமாக இருந்ததால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

 

a


அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் 10வது பிரதமர் ஆவார்.  வாஜ்பாய் முதன்முறையாக 1996ல் மே 16ம் தேதி பிரதமராக பதவியேற்றபோது அவரது பதவிக்காலம் மே 28ம் தேதி வரையில் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது.    இதையடுத்து 1998ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற வாஜ்பாய், 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார்.   இதன் பின்னர் மூன்றாவது முறையாக 1999ல் அக்டோபர் 13ம் தேதி பிரதமராக ஆனார்.  பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற அந்த முறைதான் பதவிக்காலம் முழுமையையும் பூர்த்தி செய்தார்.

 

50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1997ல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் அங்கம் வகித்தார்.

 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 25.12.1924ல் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார் வாஜ்பாய்.  பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாதவர். அரசியல்வாதி தவிர ஒன்னொரு முகமும்  உண்டு வாஜ்பாய்க்கு.  அவர் கவிஞரும் கூட. பல கவிதை தொகுப்புகளை தந்துள்ளார். 1992ல் இவருக்கு பத்மவிபூஷன் விருது  வழங்கி கவுரவிக்கப்பட்டது.   2015ல்  நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை! (படங்கள்)

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (25/12/2021) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.