![lockal_body_election](http://image.nakkheeran.in/cdn/farfuture/azXk4x98gKTDNoNtntIAqgpqWMrsbebc9wBiGq72lNs/1575268380/sites/default/files/2019-12/e34.jpg)
![lockal_body_election](http://image.nakkheeran.in/cdn/farfuture/_tQQyQcopG_jTOFgSEurINyxI9cnn104ARxqqGLoPxY/1575268417/sites/default/files/2019-12/lockal_body_election_tabler_1.jpg)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி. அதன்படி, உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 27- ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 30- ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும் என்று தெரிவித்தார்.
![film](http://image.nakkheeran.in/cdn/farfuture/-HDS0_2veGOJIzjKIZR9irgnITYUJvTw7Yd5ieqN5ks/1575275014/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202019-12-02%20at%201.36.01%20PM_0.jpeg)
மேலும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 13 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மனுவை திரும்ப பெற டிசம்பர் 18- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 16- ஆம் தேதி நடைபெறுகிறது . ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது.