Published on 19/11/2019 | Edited on 19/11/2019
சர்க்கரை குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைத்தாரர்கள், அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரிசி அட்டை பெற விரும்பினால் விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை நகலை இணைக்க வேண்டும்.

அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புவோர் இன்று (19.11.2019) முதல் நவம்பர் 26 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் (அல்லது) வட்ட வழங்கல் அதிகாரியிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய தள முகவரி www.tnpds.gov.in ஆகும். மேலும் விண்ணப்பங்கள் உடனே பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அரிசி அட்டைகளாக மாற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.