
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றதிதல் தகவல் அளித்துள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செயல்பாட்டில் திருப்தியில்லை. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அமைத்து ஓராண்டாகியும் என்ன விசாரணை நடக்கிறது என்ற விசாரணை தகவல்களை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தரவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியது.
இதையடுத்து, மாநில காவல்துறை மீது தமிழக அரசுக்கு நம்பிக்கையில்லையா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை ஆக.8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.