
கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர் எனது மகன் சிலம்பரசன் என நடிகர் டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்மையில் நடிகர் டி.ராஜேந்தர், தன்னுடைய அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் அன்று அவரது திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வரும் 28 ஆம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன். இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள். சிம்புவுக்கு நான் ஃபாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு நான் காட் ஃபாதர்; சினிமாவை விட சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை’ என்றார்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன். மாற்றத்தைக் கொண்டுவருகிறேனோ இல்லையோ, எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.
மூன்று நாளில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள், முதல்வர் ஆக நினைக்கிறார்கள். என் மகன் சிலம்பரசன், கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர். ஜாதகம் நன்றாக உள்ளவர்கள் தமிழக அரசியலில் ஜெயிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.