சேலம் மாவட்டம் பாரப்பட்டியில் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகளை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பாரப்பட்டியில் 8 வழிச்சாலைத் திட்டத்தால் நிலங்களை இழந்து பாதிக்குள்ளான மக்களை இன்று காலை சீமான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் காரணம் தெரிவிக்காமல் சீமானை கைது செய்ய முற்பட்டனர்.
இதையடுத்து, உரிய காரணம் இல்லாமல் கைதாக முடியாது என எதிர்ப்பு தெரிவித்து சீமான் தரையில் அமர்ந்தார். அவருடன் கிராம மக்களும் திடீர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான சூழ்ந்து கொண்டு கைது செய்ய விடாமல் தரையில் அமர்ந்தனர்.
இதைதொடர்ந்து, இந்த பகுதியில் உங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் தங்களை கைது செய்கிறோம் எனக்கூறி சீமானை காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இதில் சீமானுடன் கிராம மக்களும் சேர்த்து கைது செய்யப்பட்டனர்.