Skip to main content

ஐ.ஜி. மனைவிக்கு ரூ.3300.. ஸ்டேஷனின் செலவினக் கணக்கை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட எஸ்.ஐ....!!!

Published on 08/10/2018 | Edited on 08/10/2018 

police stationஅரசு வழக்கறிஞருக்கு இவ்வளவு... ஹலோ போலீசுக்கு இவ்வளவு... ஐ.ஜி.மனைவிக்கு இவ்வளவு.. என தங்களுடைய காவல்நிலையம் மூலம் செலவழித்த தொகையை, செலவினப் பட்டியலாக வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்டுள்ளார் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. ஒருவர். இதனால் தமிழக காவல்துறை வட்டாரமே கிடுகிடுத்துள்ளது.


 

police station


 

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய காவல்துறை துணைச்சரகங்களிலேயே முக்கியமானது காரைக்குடி துணைச்சரகம். இந்த காவல்துறை துணைச்சரகத்தில் மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் தவிர்த்து காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்கள், அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், சாக்கோட்டை மற்றும் செட்டிநாடு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் மறைமுகமாக லஞ்சப்பணமாக அதிக வருவாயை ஈட்டித்தருவது காரைக்குடி வடக்கு காவல் நிலையம் என்கின்றது புள்ளி விபரங்கள். இதனாலயே இந்த காவல்நிலையத்திற்கு போட்டி போட்டு வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் பலர் உண்டு. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 80 போலீசார் பணியாற்றக்கூடிய இந்த ஸ்டேஷனை பொறுத்தவரை கடந்த 4 மாதமாக ஒரு இன்ஸ்பெக்டர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. அதுபோக, 50க்கும் குறைவானவர்களே இங்கு பணியாற்றி வருகின்றனர்.   


 

police station


 

18/06/2018 அன்று 75980 35565 என்ற எண் மூலம் துவக்கப்பட்டதே KARAIKUDI NORTH PS என்ற வாட்ஸ் அப் குழு. 44 நபர்கள் கொண்ட இக்குழுவின் அட்மின் ஸ்டேஷன் ஆபிஸராகப் பணியாற்றும் எஸ்.ஐ.அரவிந்த்ராஜன். 02/09/2018 முதல் 27/09/2018 வரையிலான அந்த செலவினப் பட்டியலில், " HC 1371 தனபால் வண்டிக்கு டயர் மாற்ற ரூ.1000, Girl missing சம்பந்தமாக சென்னை சென்ற எஸ்.ஐ.க்கு ரூ.2000, அரசு வழக்கறிஞருக்கு ரூ. 500 HC 1055 வசம் கொடுத்தது என ஆரம்பித்து, ஹலோ போலீசுக்கு கொடுத்தது, விநாயகர் சதுர்த்தி டிபன் செலவு, வாட்டர் பாட்டில் செலவு என பட்டியல் நீண்டு, இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையார்பட்டிக்கு சுவாமி கும்பிட வந்த தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் மனைவி பர்சேஸ் செய்ததற்கு ரூ.3300 கொடுத்தது என்கிறது. இந்தப் பட்டியலைத்தான் ஸ்டேஷன் ஆபிஸரான எஸ்.ஐ.அரவிந்த்ராஜன், அவருடைய எண்ணான 75980 35565 மூலம் தங்களுடைய வாட்ஸ் அப் குழுவிலே வெளியிட்டு, அதிகாரிகளிடையே கலக்கத்தை உண்டாக்க, மேலதிகாரிகளை தன்வசம் வைத்துக் கொள்ளும் வித்தை வெளியானதுதான் உச்சம்.

 

police station

                                                                 எஸ்.ஐ.அரவிந்த் ராஜன்
 

 

police station

                                                                       முருகேஸ்வரி

அரசு தரப்பிலிருந்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் கொடுக்கப்படும் மாதாந்திர செலவுத் தொகையோ ரூ.3000 மட்டுமே. அப்படியிருக்க இவ்வளவு பணம் எப்படி வந்தது? "கடந்த 4 மாதங்களில் ஜூன் மாதம் 198, ஜூலை 219, ஆகஸ்ட் 191 மற்றும் செப்டம்பர் மாதத்தில் 186 என பாஸ்போர்ட்கள் விசாரணைக்காக வந்துள்ளன. பாஸ்போர்ட் என்கொயரிக்காக வரும் போது மக்களிடம் தலா ரூ.500-ஐ கட்டாயமாக வாங்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அப்படியென்றால் எவ்வளவு வருமானம் இதன் மூலம் மட்டும் வந்திருக்கும்? இத்தனை இந்தந்த போலீசாருக்கு என்று கொடுப்பது வழக்கம்.  காரைக்குடி வடக்குக் காவல்நிலையத்தைப் பொறுத்தவரை பாஸ்போர்ட் விசாரணைக்கு பொறுப்பாளரான முருகேஸ்வரி எனும் ஏட்டம்மா. அது போல், பொதுமக்களிடமிருந்துப் பெறப்படும் பணத்தைக் கொண்டு ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கை மெயிண்டெயின் செய்து ஸ்டேஷன் ஆபிஸரான எஸ்.ஐ.அரவிந்த்ராஜனிடம் ஒப்படைப்பதும் இவருடைய பணி. அப்படியிருக்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தின் வரவு செலவு கணக்கை எஸ்.ஐ.அரவிந்த்ராஜனிடம் ஒப்படைக்க, அவரோ, இதுதான் இந்த மாத கணக்கு என அதனை ஸ்டேஷனின் வாட்ஸ் அப் குழுவில் போட்டுவிட்டார். இதுதான் இப்பொழுது பூதாகரமாகியுள்ளது" என்கின்றனர் விபரமறிந்த போலீஸ்காரர்கள். இதனால் காவல்துறை வட்டாரமே கிடுகிடுத்துள்ளது என்பதுதான் உண்மை.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” - கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Karnataka  refusal to open water to Tamil Nadu

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

சிறையில் சிக்கிய குட்டி செல்போன்; ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகள் உள்ள சிறையில் செல்போன் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரல் அளவு கொண்ட செல்போனை பொறி வைத்து காவல் துறையினர் பிடித்துள்ளனர். பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1 வது ப்ளாக்கில் படிக்கட்டின் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம் கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர்.

Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.