Published on 08/02/2024 | Edited on 08/02/2024
![NIA in Chennai Officers check](http://image.nakkheeran.in/cdn/farfuture/flGDLIXtPljhomEIdDkU-YGRu7bPRTMtLfwG330lU5k/1707361901/sites/default/files/inline-images/nia-art-raid_1.jpg)
சென்னை கொளத்தூரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் முகில் சந்திரா. குறும்பட இயக்குநரான இவரது வீட்டில் ஹைதராபாத்தில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவருக்கு மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கொளத்தூரில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.