Published on 14/05/2022 | Edited on 14/05/2022
திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தாயுமானவர் கோயில் உதவி ஆணையராக இரா.ஹரிஹர சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையராக ஆ.ரவிச்சந்திரன் நியமனம். இவர் தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார். திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக எம்.லட்சுமணன் நியமனம், இவர் சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.