Skip to main content

திடீர் அறிவிப்பு... தமிழகத்தில் புதிய கரோனா கட்டுப்பாடுகள்!!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

 New corona restrictions announced in Tamil Nadu!

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 20,952 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 6,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,23,258 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 18,016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,90,338 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் தற்பொழுது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும். பேருந்துகள், டாக்ஸி, ரயிலில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி. மளிகை, காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். வணிக வளாகங்களில் உள்ள பலசரக்கு கடைகள், காய்கறிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை. தேநீர் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். இறுதிச் சடங்குகள், இறுதி ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 20 பேர் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளான மருத்துவத் தேவைகளுக்குச் செல்லலாம். அதேபோல் அவசர தேவைக்காக ரயில் நிலையம், விமான நிலையங்களுக்குச் செல்லலாம். மருந்தகங்கள், பால் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் இறைச்சிக் கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடை தொடரும். தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் மே 6 ஆம் தேதி  காலை 4 மணி முதல் 20-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

.

சார்ந்த செய்திகள்