இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் கூறி உள்ளது. கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை முதலில் போலீசார் கடைபிடிக்க வேண்டும்.
முதலில் போலீசார் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கூறியுள்ள சென்னை ஐகோர்ட், கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
அதிவேகத்தில் காரில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர் மற்றும் தற்போதைய நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.