Skip to main content

மோடியின் மொழிபெயர்ப்பாளரால் சர்ச்சை! - ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறதா? 

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

பொதுத்தளங்களில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட, ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நேர்காணல்களில் கலந்துகொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 
 

Modi

 

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்குள்ள நான்யங் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது மாணவர்களின் மத்தியில் நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பதிலளித்தார். ஆசிய கண்டம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்த பிறகு, அவரது மொழிபெயர்ப்பாளர் அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசினார். ஒற்றைக் காகிதத்தைப் பார்த்தபடி பேசிய மொழிபெயர்ப்பாளர் மோடி கூறிய பதிலையும் தாண்டி சில காரணிகளைக் குறிப்பிட்டார். அவரது இந்த செயல்பாடு மோடி கலந்துகொள்ளும் நேர்காணல்கள் முன்னமே திட்டமிடப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியது. பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். 

 

 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் இந்திய பிரதமர் வரிசையான கேள்விகளை எதிர்கொள்கிறார்; அவரது மொழிபெயர்ப்பாளர் அந்தக் கேள்விகளுக்கான பதில்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்கிறார். அப்படியானால் கேள்விகள் மட்டும் எந்தளவுக்கு நியாயமான முறையில் இருக்கும். மோடி தனது செய்கைகளால் நாம் அனைவரையும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குகிறார்’ என குற்றம்சாட்டியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்