Skip to main content

பிக்பாஸ்-2 வீட்டிலிருந்து மஹத் வெளியேற்றம்! - யாஷிகா கண்ணீர்! விரைவில் திருமணம்!

bigg boss


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து மஹத் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 65 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மமதி, ஷாரிக், பொன்னம்பலம், நித்யா, ரம்யா, அனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி ஆகிய 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் 'சென்னை 28' நடிகை விஜயலட்சுமி நுழைந்துள்ளார்.

இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் மஹத், பாலாஜி, மும்தாஜ், சென்ராயன் ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் யாஷிகாவுடனான காதல், டேனியலை தாக்கியது, மும்தாஜை படுமோசமாக விமர்சித்தது என பல்வேறு காரணங்களால் மஹத் மீது மக்கள் மத்தியில் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டிங்கில் மஹத்துக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.
 

​  bigg boss


முன்னதாக, நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட, மஹத்தை கமல் வெளுத்து வாங்கினார். மகத்திடம் நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு உள்ளே வந்தீர்கள் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என கடுமையாக திட்டினார். இதேபோல் சகபோட்டியாளர்களான ஜனனி, ரித்விகாவும் மஹத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்துவைத்தனர். காதல் மஹத் கண்ணை மறைத்துவிட்டது. அவர் அடுத்தவர் பேச்சை கேட்டு அப்படியே செயல்படுகிறார் என்றனர்.

நடிகர் சிம்புவும் மஹத்தும் நெருங்கிய நண்பர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மஹத்தை நடிகர் சிம்புவே வலுகட்டாயமாக அனுப்பி வைத்தார். மஹத்துக்கு பிராச்சி என்கிற காதலி இருந்து வருகிறார். அவ்வப்போது மஹத் மீது பெண்களிடம் நெருங்கி பழகுவது குறித்து சர்ச்சைகள் எழும்போது, சிம்புவம் மஹத்துக்கு ஆதரவாக அவர் வெளிப்படையாக இருக்கிறார். அவர் மீது தவறில்லை எனக் கருத்து கூறியிருந்தார்.

bigg boss


இந்நிலையில், கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா ஆரவ் காதல் போல், இந்த முறை யாஷிகா மஹத் காதல் பேசப்பட்டது. சமீபத்தில் யாஷிகாவை காதலிப்பதாகக் மஹத் கூறினார். இதனால் மனமுடைந்த அவருடைய காதலி பிராச்சி இனிமேல் மகத்துகும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்டாகிராமில் குமுறல்களை கொட்டித் தீர்த்தார்.

இந்தநிலையில் தற்போது மஹத் வெளியேற்றப்பட்டுள்ளார். மஹத் வெளியேற்றம் குறித்து கமல் கூறும்போது, உங்களுடைய குணத்தை கண்ணாடி போல் படம் பிடித்து காட்டியுள்ளோம். கோபம் என்பது மனிதனுக்கு உள்ளது தான் அதே நேரம் உங்களை இது திருத்திக்கொள்ளும் தருணம். தற்போது உங்களது தலைமுடி கலைந்துள்ளது அதனை திரும்பவும் வாரிக்கொள்ளலாம் என்கிறார்.
 

bigg boss


இப்படி இன்றைய நிகழ்ச்சி செல்ல, மஹத் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக கிளம்பும் போது யாஷிகா தன் காதலை மஹத்திடம் கூறுகிறார். அப்போது மஹத், நானும் உன்னை நேசிக்கிறேன். ஆனால், எனக்காக என் காதலி வெளியே காத்திருக்கிறாள். எதையும் நான் வெளியே சென்று தான் யோசிக்க முடியும் என்கிறார். இப்படி இருவரும் மாறி மாறி தங்கள் காதலை கண்ணீருடன் வெளிப்படுத்த, யாஷிகாவும் வெளியே வந்தும் நாம் ஒன்றாக தான் இருக்க போகிறோம். நாம் எப்போதும் பிரியமாட்டோம் என்கிறார். அனைவரும் கண்ணீருடன் மஹத்தை வழி அனுப்புகின்றனர். இப்படி உருக்கமான காதல் காட்சிகள் நிறைந்தத்தாக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல உள்ளது.

இந்த வார தலைவரான மஹத் வெளியேறிவிட்டதால், செண்ட்ராயன் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளர். மஹத்தை வெளியேற்றிய மக்கள் ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் வெளியேற்ற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எது எப்படியோ.. இனிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என தெரிகிறது.

இதனிடேய, யாஷிகா மஹத் காதலையும், அவர்கள் கட்டி தழுவியதையும், கண்ணீர் வடித்ததையும், அவர்கள் அன்பு வார்த்தை பிரமாற்றங்ககளையும் பார்த்த பார்வையாளர்கள் இவர்கள் இருவரும் வெளியே வந்ததும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்கின்றனர்..