kolathur

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழ் நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முகநூல் பதவிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியதாவது,

''எச்.ராஜா எந்த இனத்திற்காக பேசுகிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து எச்.ராஜாவுக்கு அறிவுரை சொல்லுங்கள், அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை அந்த இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.