Skip to main content

சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது..! கமல்ஹாசன் ட்வீட்..!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
Kamal Hassan

 

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. 

 

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

 

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்'' இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘கல்கி படத்தில் நடிக்கச் சம்மதிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டது ஏன்?’ - கமல்ஹாசன் தகவல்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Kamal Haasan informs Why did he take a year to act in Kalki?

தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், ‘கல்கி 2898 ஏ டி’. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரில், வயதான தோற்றத்தில் ஏற்று நடித்திருக்கும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது. 

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோசனுக்காக படக்குழு பல இடங்களில்  பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இப்படத்தின் படக்குழு புரோமோசன் பணியில் ஈடுபட்டது. அதில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கமல்ஹாசனின் தேர்வு குறித்து தலைப்பு எழுந்தது. அதற்கு பிரபாஸ், ‘இந்தப் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவும், அவரிடம் சம்மதம் வாங்கவும் ஒரு வருட காலமாக காத்திருந்தோம். ஒரு கட்டத்தில், என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், என்னை விட்டுவிடுங்கள் என்று கமல்ஹாசன் நினைத்திருப்பார்’ என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “இது தொந்தரவு பற்றிய கேள்வி அல்ல. அப்போது, சுயசந்தேகத்தை தந்தது. இந்தப் படத்தில் அமிதாப் இதைச் செய்கிறார், பிரபாஸ் அதைச் செய்கிறார். ஆனால், நான் என்ன செய்ய போகிறேன். அதுதான் காரணம். நான் இதற்கு முன்பு வில்லனாக நடித்ததில்லை. அப்படி வில்லனாக நடித்திருந்தாலும், மனநோயாளி கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் வேறு” என்று கூறினார். 

Next Story

பாஜகவினருக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Prime Minister Modi's important instructions to the BJP

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று (10.06.2024) அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பாஜகவினரின் பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனக் குறிப்பிட்டிருப்பதை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக மோடியின் குடும்பம் (Modi Ka Parivar - மோடி கா பரிவார்) என சேர்த்தனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு வகையான சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர். 

Prime Minister Modi's important instructions to the BJP

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்படத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து மோடியின் குடும்பம் என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது ‘பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் தளத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.