kss

திமுக தலைவர் கலைஞரை அழைத்துச்செல்ல காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்தது. அங்கு தொண்டர்களின் பெரும் கண்ணீருக்கு மத்தியில் ஆம்புலன்ஸில் கலைஞர் ஏற்றப்பட்டு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார்.

Advertisment

கலைஞரின் உடல்நிலை சற்று நலிவடைந்ததால், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்துக்கு மருத்துவர் குழு வருகை தந்தனர். அவர்கள் உடனடியாக மருத்தவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியதால் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் குவிந்துள்ளனர். நேற்றைவிட கலைஞருக்கு இன்று நோய்தொற்று குறைந்துள்ளதாகவும், காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது ஏராளமான திமுக தொண்டர்கள் பெரும் பதட்டத்துடன் கோபாலபுரம் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.