kalaignar

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்-தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. 95 வயது முதுமைக்கேயுரிய வகையில் கல்லீரலின் செயல்பாடு குறைந்ததன் காரணமாக, மஞ்சள்காமாலை அறிகுறி தென்பட்டதுடன், ரத்த தட்டணுக்கள் (ப்ளேட்லெட்ஸ்) எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான தட்டணுக்கள் குறைந்து வருவதால், அவருக்கு செலுத்தப்படும் மருந்துகளும் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலைஞரின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவை தொடர்பான சிகிச்சைகள் குறித்த காவேரி மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கையை திங்கள்கிழமை மாலை வெளியிட்டது.

Advertisment

கலைஞரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் பெயரில் வெளியாகியிருக்கும் மருத்துவ அறிக்கையின் தமிழ் வடிவம்:

Advertisment

kalaingar

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான, கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைப் பராமரிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இதற்கு அவரது வயது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்தில், கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பதன் அடிப்படையிலேயே அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும்.