கொள்ளையர்கள் பலவிதமான கொள்ளையர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு வகைதான்ஈரானி கொள்ளையர்கள். சென்னையில் பல செயின் அறுப்பு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2013ம் ஆண்டுவாக்கில் அவர்கள் பிடிபட்டனர், அதன்பின்பு அவர்களின் நடமாட்டம் இல்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிலையில்கடந்த 2,3 மாதங்களாக அவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது ஆனால் இது தொடர்பானஎந்த தகவலும் கிடைக்கவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு தி.நகரில் அவர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இது பதிவாகியுள்ளது. இதைவைத்துதான் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று காலை 6 மணிமுதல் அம்பத்தூர், புழல், மாதவரம் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக 5 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத்தொடர்ந்து வடக்கு இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாஉடனடியாக வடக்கு பகுதி காவலர்களை எச்சரிக்கைசெய்துள்ளார். அப்போது புழல் பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராவில் இவர்கள் வந்துசென்ற ஒளிப்பதிவு கிடைத்துள்ளது. அந்த வண்டி மஹாராஷ்டிர பதிவெண்ணைக்கொண்டது என்பதையும், அந்த வண்டி ஆந்திரா நோக்கி செல்வதையும் கண்டறிந்தனர். உடனே அந்த சாலையிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிக்கும் காவலர்களை அனுப்பியுள்ளார், அனைத்து காவலர்களையும் கவனமாக இருக்கும்படியும் கூறியுள்ளார்இணை ஆணையர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
ஆந்திர மாநில எல்லையில்ஒரு குழு அந்த வண்டியை கண்டுபிடித்து தகவல் தெரிவித்துள்ளது. அதற்குள் அந்த வண்டி ஆந்திராவிற்குள் நுழைந்துவிட்டது. பின் ஆந்திர காவலர்களின் உதவியுடன் அந்த கொள்ளையர்களை பிடித்துள்ளனர். இந்த ஒட்டுமொத்த தேடுதல் வேட்டையையும் ஏழு மணிநேரத்திற்குள் வெற்றிகரமாகமுடித்துள்ளது தமிழக காவல்துறை. இதற்கு காவல்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.