Skip to main content

80 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை! மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்!

Published on 10/10/2021 | Edited on 10/10/2021
hhhhhhhh

 

தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர்மின் கோபுரத்திற்கு முறையான இழப்பீடு பணம்  கிடைக்காததால்  மனமுடைந்த விவசாயி தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அன்னமங்கலம், பகுதி கலிங்கமலை கிராமத்தில் தன்னுடைய விவசாய நிலத்தில் உயர்கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டு முடிவுற்ற நிலையில் மீதமுள்ள உரிய இழப்பீடு தொகை வழங்காததால் விவசாயி மணி(55) என்பவர் உயர்கோபுர மின் கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

கலிங்கமலை கிராமத்தில் வசித்து வந்தவர் 53 வயதுடைய மணி. இவருக்கு மனைவி ஜெயந்தி (47) பிள்ளைகள் ரஞ்சித் (24) , பவித்ரா (26) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடம் 3.5 ஏக்கர் நிலத்தின் ஒருபுறம் 100 அடி உயரம் கொண்ட 7600 வாட் மிண் கோபுரம்  அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த உயர்மிண் கோபுரமானது வட சென்னையில் இருந்து திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதிக்கு சுமார் 7600 வாட் மின்சாரத்தை விவசாய நிலங்கள் இடையே கடந்த 2019 ஆண்டு துவங்கி பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. விவசாயி மணிக்கு 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க அதிகாரிகள் கூறிய நிலையில்  1லட்சம் மட்டுமே வழங்கியதாகவும்  இன்று மின் கோபுரத்தில் எச்சரிக்கை பலகை வைப்பதற்காக பணியாளர்கள் வந்ததால் அவர்களிடம் மீதி பணத்தை  மணி கேட்டுள்ளார்.

 

அப்போது அங்கே வந்தவர்கள் பணம் எல்லாம் கொடுத்து முடித்தாகிவிட்டது எனவும் மீதம் பணம் கொடுக்க வேண்டியதில்லை என கூறியதால் கோபத்தில் அவர் நிலத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 100 மீட்டர் மின் கோபுரத்தில் சுமார் 80 அடி உயரம் வரை ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விவசாயி மணி இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை உடலை கீழே இறக்க விடமாட்டோம் என கிராம மக்கள் போராட்டம். தற்போது சேத்துப்பட்டு செஞ்சி மாவட்ட நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

 

மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் இதுவரை யாரும் சம்பவ இடத்திற்கு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேல்மலையனூர் தீயணைப்பு மீட்புப் படையினர் உயிரிழந்த விவசாயம் அணியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்ட மணியின் உடலை அவர்கள் கீழே இறக்கினர். சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் ,மேல்மலையனூர் வட்டாட்சியர், உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்