Skip to main content

பிரபல ரவுடி புல்லட் நாகராஜனை மடக்கி பிடித்த காக்கிகள்!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
bull ee


மதுரை மத்தியசிறை எஸ்.பி.ஊர்மிளாவை பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் மிரட்டியதை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவையும் ஆடியோ மூலம் பேசி மிரட்டியிருக்கிறார். பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மதனகலா அப்பகுதியில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் பிரபல புல்லட் நாகராஜன் ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த விஷயம் புல்லட் நாகராஜூக்கு தெரிந்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் மதன கலாவிற்கு ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் நீ என்ன பெரிய விஜயசாந்தினு நினைப்பா யாரைப்பார்த்தாலும் அடித்து உதைத்து கைது செய்து வருகிறாய். அதை முதல நிறுத்து பொம்பலைன்னா பொம்பலை மாறி நடந்துக்கனும் அதை விட்டுட்டு என் ஆட்களை அடிச்சு உதைக்கிறது. கைது செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டேனு வச்சுக்க கண்கானாத இடத்துல ஈமொச்சு போய் கிடப்ப ஜாக்கிரதையாக இருந்துக்க நான் சொல்றதை கேட்டு ஒழுங்கா நடந்துக்க இல்லைனா தொலைச்சுபுடுவேன். இவ்வளவு பேசுறியே என் வீட்டு முன்னாடி நூறு போலீச நிப்பாட்டிக்க முடிஞ்சா என்னை உள்ள வந்து அரஸ்ட் பன்னிபாரு அங்கேயே நான் செத்து போயிருவேன். இந்தபாரு உன்னை எங்க தொட்டா எப்படி வழிக்கும்னு தெரியும் அதற்கு ஏத்த வேலைகளை செஞ்சுறுவேன் நான் சாதாரன ஆள் கிடையாது என மிரட்டி இருக்கிறார். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்-யையும் எஸ்.பி.பாஸ்கரனையும் மிரட்டி இந்த ரவுடி புல்லட் நாகராஜன் ஆடியோ வெளியிட்டிருந்தான்.

இதனால் டென்சன் அடைந்த எஸ்.பி. பாஸ்கரன், டிஎஸ்பி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் மதனகலா, தலைமையில் தனிப்படை தனிப்படை அமைத்து ரவுடி புல்லட் நாகராஜனை தேடிவந்தனர். இந்தநிலையில்தான் புல்லட் நாகராஜன் மேல்மங்களத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பெரியகுளத்திற்கு பல்சர் பைக்கில் வரும்போது வைகை டேம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையிலான காக்கிகள் ரவுடி புல்லட் நாகராஜனை விரட்டி பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு கைது செய்யப்பட்ட ரவுடி புல்லட் நாகராஜனிடம் இன்ஸ்பெக்டர் மதனகலா அதிரடி விசாரணை செய்து வருகிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நண்பனுக்கு ஒரு புல்லட் பார்சல்' - பர்த்டே கிஃப்ட் கொடுக்க கைவரிசை காட்டிய சிறை நண்பர்கள் கைது

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

'A Bullet bike Parcel for a Friend' - Prison Friends Arrested for Handing in Birthday Gift

 

புதுச்சேரியில் நண்பனின் பிறந்தநாளுக்கு புல்லட்டை பரிசளிக்க நினைத்த நண்பர்கள் புல்லட்டை திருடி பரிசாகக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள். இவர் கடந்த வாரம் ஈ.சி.ஆர் சாலையில் தன்னுடைய புல்லட்டை நிறுத்தியிருந்த நிலையில், காணாமல் போனதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர்.

 

தொடர் விசாரணையில், காணாமல் போனதாகக் கூறப்படும் புல்லட்டை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்ல, பின்னாடியே மற்றொரு இளைஞர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த காட்சி சிக்கியது. இந்த காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அருகில் உள்ள மற்ற எல்லைக் காவல் நிலையங்களுக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டு இளைஞர்கள் குறித்த தகவலை போலீசார் திரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது நெட்டப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. புல்லட்டை ஓட்டிக்கொண்டு சென்றது கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது. அஜித்குமார் ஏற்கனவே நீர் மோட்டாரை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிந்தது. உடனடியாக அஜித்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், பர்த்டே கிப்ட்காக புல்லட்டை திருடியது வெளிவந்தது.

 

அஜித்குமார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்த பொழுது, அதே சிறையில் பெரியார் நகரைச் சேர்ந்த உத்ரேஷ் என்ற நபருடன் பழக்கமாகியுள்ளார். இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டனர். இருவரின் நட்பும் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் உத்ரேஷ் தனக்கு புல்லட் வாங்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய ஆசை நிறைவேற்ற நினைத்த அஜித், ஆனந்த் என்ற மற்றொரு நண்பருடன் சேர்ந்து புல்லட்டை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து புல்லட் மட்டுமல்லாது மொத்தம் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

Next Story

வீட்டுக்குள் புகுந்த துப்பாக்கி குண்டு... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Gunshot inside the house ... Police in intensive investigation

 

பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காடு காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு வீட்டுக்குள் (புல்லட்) வந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்  நாராயணசாமி, சுப்பிரமணியன் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதோடு அவரது வீட்டு கூரையை துளைத்து கொண்டு வந்த புல்லட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

 

இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன் குடும்பத்தினர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இரண்டு மாதத்திற்கு முன்பு இதேபோன்று ஹாஸ்பெட்டாஸ் ஷீட் சுத்தம் செய்த போது மற்றொரு சிறிய ரக துப்பாக்கி குண்டு கிடந்துள்ளது. அந்தக் குண்டு துளைத்த மேற்கூரையும் சுப்பிரமணியம் குடும்பத்தினர் காண்பித்துள்ளனர். இதையடுத்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது இந்த புல்லட் சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்துக் கொண்டு வந்து விழுந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாடாலூர் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தின் அருகில் உள்ளது பச்சைமலை.

 

Gunshot inside the house ... Police in intensive investigation

 

இந்த மலை அடிவாரத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூடும் தளம் உள்ளது. இங்கு கடந்த 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ( ஆர்பிஎப்) போலீசார் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டபோது யாரோ ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு மலையின் பின்புறம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஈச்சங்காடு காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்த சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்துக் கொண்டு விழுந்துள்ளது என போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து திருச்சி தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து அந்த புல்லட்டை பார்வையிட்டு அது என்ன ரகம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.