Skip to main content

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Counting of votes started

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சீல் அகற்றப்பட்டது. பல்வேறு நடைமுறைகளுக்கு பின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 39 மையங்களில் 243 அறைகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 76 பெண்கள் உட்பட 950 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சந்திரபாபு, நிதிஷ்குமார் ஆதரவு; ஆட்சியமைக்கத் தயாரான பா.ஜ.க

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
BJP is ready to form the government with Chandrababu, Nitishkumar support

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. 

அதே சமயம் ஆந்திரப் பிரதேசத்தில் 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் 12 மக்களவைத் தொகுதிகளை வென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளார். அதாவது சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியினர் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. 

இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். அதே வேளையில் இன்று (05.06.2024) பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கினர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு குடியரசு தலைவர் திரவெளபதி முர்முவை இன்று (05.06.2024) சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; வெற்றி பெற்ற இளம் வயது வேட்பாளர்கள்!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Successful young candidates in Lok Sabha elections

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. 

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியமிகுந்த சம்பவமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி சார்பில் சாம்பிவி சவுத்ரி போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 1,87,251 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல், ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் தொகுதியில் இளம் வயது வேட்பாளர் சஞ்சன ஜாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை ராம்சுவரூப் கோலியை தோற்கடித்து 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட இளம் வயது வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், பா.ஜ.க வேட்பாளர் வினோத் குமாரை தோற்கடித்து 1,03,944 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் இந்தர்ஜித் சரோஜின் மகன் ஆவர்.  அதே போல், மற்றொரு சமாஜ்வாதி இளம் வயது வேட்பாளர் பிரியா சரோஜ்,, உத்தரப் பிரதேசம் மச்சிலிஷாஹர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் போல்நாத்தை 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.