சென்னையில் நள்ளிரவில் நடக்கும் கேளிக்கைகள், மது விருந்துகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தமிழக போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு சென்னையில் பாருடன் செயல்படும் யப் 1, யப் 2, யப் லைசன்ஸ்சுடன் செயல்படும் அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் பொதுமேலாளர் மற்றும் தலைமை செக்யூரிட்டி ஆபீசர் ஆகியோர் ஜூலை 11ஆம் தேதி ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன் பேரில் 70 பேர் நட்சத்திர ஓட்டல் சார்பில் கலந்துக்கொண்டனர். இதில் காவல்துறை சார்பில் ஏடிஜிபி ஆபாஷ்குமார், போதை தடுப்பு நுண்ணறிபிரிவு எஸ்.பி. ஆனிவிஜயா, எஸ்.பி தீபா மற்றும் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி புருஷோத்தமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் போதைப்பொருள் தடுப்பு பற்றியும், அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல் போலீஸ்சாருக்கு வழக்குவதை பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டது.