Published on 09/05/2020 | Edited on 09/05/2020

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 22- ஆம் தேதி கோவையில் நடத்த சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்டு சீமான் பேசினார். அப்போது அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக கோவை குனியமுத்தூர் காவல்துறையினர், அவர் மீது 124ஏ, 153ஏ, 1ஏ பிரிவுகளின் கீழ் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.