Skip to main content

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து; அமைச்சர்கள் ஆய்வு! மீட்பு! முழுதொகுப்பு படங்கள்!

Published on 28/04/2022 | Edited on 28/04/2022


 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும், அருகேயுள்ள வார்டுகளில் இருந்த நோயாளிகளை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஓட்டலில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறி தப்பித்த வாடிக்கையாளர்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Aruppukottai hotel fire incident

விருதுநகர் மாவட்டம் -  அருப்புக்கோட்டை பஜார் பகுதியில்,  இனிமைஹோட்டல் என்ற பெயரில் தனியார் உணவகம் உள்ளது.  இந்த உணவகத்தின் மாடியிலுள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  அங்கிருந்து தீ பரவி,  மாடி அறை முழுவதும் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததும்,  உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இந்தத்  தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத்  தீவிபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதனப் பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள்கள்,  சேர்கள்  ஆகிய அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Aruppukottai hotel fire incident

இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது .மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா?  இல்லை வேறு ஏதேனும் காரணமா?  என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.