காவிரி தீர்ப்பில் தண்ணீர் வரத்து அளவு குறைக்கப்பட்டது ஏமாற்றமே என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி தீர்ப்பில் தண்ணீர் வரத்து அளவு குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் எனக்கு ஒரு சின்ன மன நிம்மதி உள்ளது. 10 வருடத்திற்கு முன்னால் நான் கூறியது, ’நாம் எல்லாம் குரங்காக இருந்தபோது காவிரி ஓடிக்கொண்டிருந்தது’தற்போது திடீரென அதனை சொந்தம் கொண்டாட முடியாது. அதே எதிரொலி தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பில் வெளிவந்திருப்பது எனக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
தற்போது குறைந்த அளவு டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலும், இதை பத்திரப்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. அதை விட மிக முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. இரு மாநிலங்களுக்கான ஒற்றுமை. ஓட்டு வேட்டை என நினைத்துக் கொண்டு இந்த சச்சரவுகளை தூண்டி விடுபவர்கள் தேசியம் மறந்து பேசுகிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.
இது இருவருக்கும் சொந்தம். யாரும் அதை தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது தீர்ப்பது. அதற்குள் நாம் கிடைக்கும் தண்ணீரை எப்படி நாம் சேமிப்பது, எப்படி உபயோகப்படுத்துவது என்பதை தான் யோசிக்க வேண்டும். தீர்ப்பு அழுத்தமாக இருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது.
ஆர்ப்பாட்டத்தினால் நடக்காது என நான் நனைக்கிறேன். நான் சொல்வது பழைய யுத்தி, காந்தி அளவு பழைய யுத்தி. இருமாநிலங்களும் கலந்து பேச வேண்டும். இருமாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நதி இணைப்பு எல்லாம் பேச முடியும். நதி தேசிய சொத்து என நினைத்தால் தான் இணைப்பது பற்றியெல்லாம் பேச முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.