


Published on 15/08/2020 | Edited on 15/08/2020
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (15-8-2020), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் தி.மு.க.வில் இணைந்தார்.
திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ., வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் கே.பி.நந்தகுமார், எம்.எல்.ஏ., வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், எம்.பி., வேலூர் மத்திய மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி ஆகியோர் உடனிருந்தனர்.