Skip to main content

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்றால்? அமைச்சர் தங்கமணி வேதனை!

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
thangamaniஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்றால், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியை போல் ஆகிவிடுவோம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்றால், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியை போல் ஆகிவிடுவோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுகிறார். அதிமுகவை கைப்பாவை பொம்மையாக ஆட்டுவிக்க முயற்சிக்கும் தினகரனின் கனவு நிறைவேறாது. பதவியை பிடிக்க துடிக்கும் தினகரனுக்கு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

”ஓபிஎஸ் மகள் வீட்டில் நடந்த சமாதான பேச்சு வார்த்தை பிரச்சனையில் முடிந்தது” - முன்னாள் அமைச்சர் தங்கமணி

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

"Vaidhyalingam tried to beat..." Thangamani explained what happened in the discussion about the general committee

 


அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதற்காக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். எனினும் கட்சியின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் தான் இருக்கிறது. 

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “தொண்டர்கள் பத்திரிக்கைச் செய்தியைப் பார்த்து குழப்பம் அடைகிறார்கள். நம் கட்சி இருக்குமா எனச் சந்தேகம் தொண்டர்களுக்கு உள்ளது. கட்சி நன்றாக இருக்கும் போதே ஓபிஎஸ் தர்மயுத்தம் இருந்தார். இருந்தும் கட்சி உடையக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தார். கட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை வந்தது.

 

மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என நாங்கள் கூறினோம். இதன் பின் அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக எடப்பாடி பழனிசாமியை முடிவு செய்தனர். ஆனால் அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆயினும் அவரை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாக நடத்தி விடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்திற்கு இணைபொதுச்செயலாளர் பதவியைத் தருகின்றேன் எனச் சொன்னார். ஓபிஎஸ் அவர் மகனுக்கு மந்திரி பதவி கேட்டார். அதையும் தருகிறேன் எனச் சொன்னார். இதன் பின்னும் பிரச்சனை நீடித்தது. 

 

ஒரு முறை நேரில் வாருங்கள் அதன் பின் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் எனப் பலமுறை அவரிடம் கூறினோம். குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி முதலில் சொல்லுவார். பின் மீண்டும் அழைத்து வைத்தியலிங்கம் இல்லாமல் எப்படி வருவது எனக் கேட்பார். பின் மீண்டும் ஒரு நாள் போன் செய்தார். தன் மகள் வீட்டிற்கு வரச் சொன்னார்.  நாங்கள் எல்லாம் போவதற்கு முன்னாலேயே அங்கு வைத்தியலிங்கம், மனோ தங்கராஜ், ஜெ.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இருந்தனர். 

 

நாங்கள் பன்னீர் செல்வத்தை போனில் அழைத்து நீங்கள் மட்டும் வருவதாக இருந்தால் பேசலாம் எனக் கூறினோம். அதற்கு அவர் “இப்பொழுது தான் சுகர் மாத்திரை சாப்பிட்டேன். சற்று நேரம் உட்காருங்கள் வந்து விடுகிறேன்” எனக் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் வரவில்லை. நான் வருகிறேன் அவர்களிடத்தில் பேசுங்கள் எனச் சொன்னார். நாங்களும் பேச ஆரம்பித்தோம். தயவு செய்து இங்கு தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இயக்கம் ஒற்றுமையாகச் செயல்படக்கூடாது எனக் கூறி வைத்தியலிங்கம் போட்ட ப்ளாண் தான் இவை அனைத்தும்.

 

நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார், “தொண்டர்களின் மனநிலையை நாம் அறிந்து செயல்படவேண்டும். இன்று திமுக இருக்கின்ற நிலைமையில் நாம் சட்ட மன்றத்தில் திமுகவைப் பாராட்டிக் கொண்டிருந்தால் எந்த தொண்டனாவது நம்முடன் இருப்பானா? இந்த இயக்கம் ஆரம்பித்ததே திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். எம்ஜிஆர் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக்கொடுத்த பாடம் திமுக தான் நமக்கு எதிரி. அதை எதிர்க்க வேண்டும் என்பது தான். சட்டமன்றத்தில் அவர்களைப் பாராட்டினால் மக்கள் எப்படி நமக்கு வாக்களிப்பார்கள். ஆக நீங்கள் மக்களின் மனநிலையைப் பாருங்கள்” என்று நத்தம் விஸ்வநாதன் சொன்னார்.  இவர் இப்படி சொன்னவுடன் வைத்தியலிங்கம் எழுந்து பெரிதாகச் சத்தம் போட்டு நத்தம் விஸ்வநாதனை அடிக்கப்போகிறார்.

 

எப்படி இவர்கள் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்து இருப்பார்கள். இயக்கம் பிளவுபட வேண்டும் தான் என்பது அவரது எண்ணம். அந்த எண்ணத்தை வைத்தியலிங்கம் நிறைவேற்றிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

 

Next Story

திமுகவின் அரசியல் காழ்புணர்ச்சிகளால் நடத்தப்படும் ரெய்டுகள் - முன்னாள் அமைச்சர்

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

thangamani

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்  காரணம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

 

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் பெயரிலும் அவரது  குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி   வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்  துறையினர் அவருக்கு தொடர்பான 30 இடங்களில் செய்த சோதனைகளில் 26,52,660 ரூபாயும், 1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும், நான்கு சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

 


இந்நிலையில் நடந்த இந்த சோதனைக்கு அரசியல் பழிவாங்கும் எண்ணமே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச்  சந்தித்த அவர் சோதனை அடிப்படையில் ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என வேண்டும் என்றே இந்த திமுக அரசு இன்றைய தினம்  சோதனை நடத்தி உள்ளது. அதிமுக உறுப்பினர்களை ஒவ்வொருவராக இப்படி சோதனை செய்கின்ற பொழுது ஏதோ இயக்கத்தை முடக்கிவிடலாம் என நினைக்கின்றார்கள். இதனால் தொண்டர்கள் மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் இதைவிட இன்னும் வேகமாக பணியாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம்" என்று கூறியுள்ளார். சமீப காலமாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவது  குறிப்பிடத்தக்கது.