Skip to main content

வைரலாகும் மாறனின் மாஸ் லுக்! (படங்கள்)

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்துள்ளார். கேப்டன்  கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

 

'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள், படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், படம் நவம்பர் 12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரரைப் போற்று படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டாப் இந்தியத் திரைப்படப் பட்டியல் - சூர்யா நிறுவனம் மகிழ்ச்சி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
suriya produced 2 movies in imdb new top 250 indian list

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்குத் தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை டாப் 250 இந்தியத் திரைப்படங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 12 மற்றும் 13 இடங்களில் சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன. இதனை இந்த இரு படங்களைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய்பீம்’. இப்படத்தில் சந்துரு என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார் சூர்யா. மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பினைக் கொடுத்திருந்தார்கள். இசைப் பணிகளை ஷான் ரோல்டன் மேற்கொண்டிருந்தார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது.

Next Story

ரியல் மாறனை சந்தித்த பொம்மி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

actress aparna balamurali meet captain gr gopinath

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

 

இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்த படப்பிடிப்பில் சுதா கொங்கராவுக்கு கையில் அடிபட்டதால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், 'பொம்மி' கதாபாத்திரத்திற்காக தேசிய விருது வாங்கிய அபர்ணா பாலமுரளி, கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மத்ருபூமி இலக்கிய விழாவில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதற்கு அபர்ணா பாலமுரளி தற்போது நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "உங்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது பெருமையான தருணம் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.