Skip to main content

சீமராஜாவிற்காக புது கெட்டப் போட்ட சிவகார்த்திகேயன் 

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
sk


'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 19ஆம் தேதி முடிவடைகிறது. இப்படப்பிடிப்பின் முடிவுக்கட்டத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத தாடி மீசையுடன் கூடிய புதிய தோற்றத்தில் நடிக்து வருகிறார். இந்த புதிய கெட்டப் படத்தில் உள்ள ப்ளாஷ்பேக் காட்சியில் கீர்த்தி சுரேஷுடன் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசர், டிரைலர்களை விரைவில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தில் நாயகியாக சமந்தாவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும் நடித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்