கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமானரத்னகுமார்,இந்தியசுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில்,கழுதிகோட்டை போர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"இன்றைக்குதாஜ்மகாலையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும்வரலாற்றுபொக்கிஷங்கள் என்கிறோம். ஆனால்,அதைவிடபெரியவரலாற்றுப்பொக்கிஷமாக கமுதி கோட்டை உள்ளது. அங்கு நம்ஆட்களைப்பீரங்கி முன்னால் நிற்க வைத்து வெள்ளைக்காரன் சுட்டுத் தள்ளியிருக்கிறான். அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கோட்டை இன்று கவனிப்பற்று கிடைக்கிறது. நம்முடைய வரலாறு அனைத்தையுமே வெள்ளைக்காரன் ஆவணமாகப் பதிவு செய்துள்ளான். ஆனால், இன்றைக்கு நம் ஆட்கள் அதைஎடுத்துப்படித்துப் பார்ப்பதுகூட இல்லை.
மயிலப்பன்சேர்வை,முத்துக்கருப்பத்தேவர்,சிங்கம்செட்டி,ஜெகநாதஐயர்பற்றியெல்லாம்பலருக்கும் தெரிவதில்லை. ஆஷ் துரைக்குவாஞ்சிநாதன்குறிவைப்பதற்கு முன்னரே,லூசிங்டன்என்றகலெக்டருக்குகுறி வைத்தவர்கள்மயிலப்பன்சேர்வையும்ஜெகநாதஐயரும். இவர்களது குறியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக லூசிங்டனேஎழுதியிருக்கிறார். வீரபாண்டியகட்டபொம்மனைகொல்வதற்கு முன்பாகபானர்மேன், கொடூரமான படைத்தளபதியானமில்லர்,அக்னியூவ்கமுதிக்குபடையெடுத்துவருகின்றனர். அப்போதுமயிலப்பன்சேர்வை தலைமையிலான நம்முடைய புரட்சிக்காரர்கள் கமுதிகோட்டையைகைப்பற்றி விடுகின்றனர். அங்குதான் நெல் உள்ளிட்ட அனைத்தையும் வெள்ளைக்காரன் சேமித்து வைத்திருந்தான். அதைக்கைப்பறிநம்முடைய ஆட்களுக்கு விநியோகம் செய்ததால்வெள்ளைகாரனுடன்மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது. அந்தச் சண்டையில் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தசிங்கம்செட்டிவெள்ளைக்காரனிடம் சிக்கி விடுகிறார். 10டன்எடைகொண்ட பீரங்கி முன்னால் நிற்க வைத்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறார்கள்.கவர்னர்எட்வர்ட்க்ளைவுக்குஎழுதிய கடிதத்தில்கலெக்டர்லூசிங்டன்இதைப் பதிவு செய்திருக்கிறான்.
ஜெகநாதஐயரை யார் என்றே அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஐயர் என்றால் கொண்டை போட்டுக்கொண்டு சாதுவாக இருப்பான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்,ஜெகநாதஐயர் திடகாத்திரமான உடலமைப்புடன்பயங்கரமாகசண்டை செய்துகொண்டிருந்தார். அந்தச் சண்டையில்வெள்ளைகாரனின்கையில்படமால்மயிலப்பன்சேர்வை,முத்துக்கருப்பத்தேவர்,ஜெகநாதஐயர் தப்பித்துவிட்டனர். அதன் பிறகானமயிலப்பன்சேர்வை மற்றும்ஜெகநாதஐயரின் எழுச்சி மிகப்பெரியது.
இது மாதிரியான நம்முடைய வரலாறெல்லாம் தூசி படிந்து கிடக்கிறது. அதைத்தட்டியெடுத்துபடிக்க வேண்டும். நம்முடையசுதந்திரத்திற்காகபோராடியவர்களின்வரலாற்றைபடிக்கும்போதுதான்நமக்குதேசப்பற்றும், அந்தத் தலைவர்களின் மீது மரியாதையும் வரும்".