உலகின்மிக உயரமான கட்டிடங்களை தன்னகத்தே கொண்டுள்ள இடம்தான் துபாய். இந்நிலையில்,சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒருஹோட்டல்உலகிலேயே மிக உயரமானஹோட்டல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/w t h.jpg)
இந்த ஹோட்டல் பெயர் "ஜீவோரா". இப்படிப்பட்ட உயரமான கட்டிடங்கள் மூலம் 2020க்குள் இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக இந்தப் பெருமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
75 மாடிகள், 528 அறைகள் கொண்டஇந்த ஹோட்டலின்உயரம்356அடி. இது 2008ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிடம் பத்து ஆண்டுகளுக்குப் பின் கடந்த 12ஆம்(12.02.2018) தேதிதிறக்கப்பட்டது. இந்த கட்டிடம்தங்க நிற கோபுரத்துடன் கவர்ச்சிகரமாகவும்உள்ளது. இதற்குமுன் உலகிலேயே மிக உயரமான ஹோட்டல் என பெயர் பெற்ற "மேரியாட் மார்க்குயிஸை"விடஇது ஒரு அடி உயரமானதாகும்.
இதற்குமுன் இருந்தஉலகின்உயரமான ஹோட்டல்களும் துபாயில்தான் உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12595277.jpg)
மேரியாட் மார்க்குயிஸ் -355மீட்டர்உயரம்
ரோஸ் ரேஹன் -333மீட்டர்உயரம்
புர்ஜ் அல் அரப் -321மீட்டர்உயரம்
ஜூமைரா எமிரேட்ஸ் டவர் -309மீட்டர்உயரம்
தி அட்ரஸ் டவுன் டவுன் துபாய் -306 மீட்டர்
மில்லினியம் பிளாசா -294மீட்டர்
இதுதவிர உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமை வாய்ந்த "புர்ஜ் கலிஃபா"வும் துபாயில்தான் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)