ஆண்டுதோறும் அக்டோபர் 14ம் தேதியில் உலக தர நிர்ணய தினம்(World Standards Day)கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் தரம் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கவும், தரம் குறித்த பல்வேறு தளங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்களை சிறப்பிக்கும் வகையிலும் இந்த தினம் உலக தர கொண்டாப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/geneva_0.jpg)
தரம் என்பது கடைபிடித்தே தீர வேண்டிய பொது நெறிமுறை என்பதை ஒவ்வொரு உற்பத்தியாளரும் உணரும் விதத்திலும், தரமான உணவினை பெறுதல், அதற்கான தொகையினை செலுத்தும் நுகர்வோரின் உரிமை என்பதையும் உணரும் வகையிலும் உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 1946ம் ஆண்டு, லண்டனில் 25 கூடி ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப்பின்னர், சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவானது. ஜெனீவாவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 130 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங் துறைக்கு ஐ.இ.சி., தொலைதொடர்பு துறைக்கு ஐ.டி.யூ., , பிற அனைத்து துறைகளுக்குமான சர்வதேச தர நெறிமுறைகளை ஐ.எஸ்.ஓ., என வகுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும் சான்றளிப்பதிலும் இந்திய தர நிர்ணய அமைப்பு(Bureau of Indian standards)இருக்கிறது. இது ISOவில் அங்கம் வகிக்கிறது. 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பி.ஐ.எஸ் சட்டம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய இந்திய தர அமைப்புச் சட்டம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/World-Standards-Day-October-14.jpg)
தொழிலின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த உதவும் ஐஎஸ்ஓ சான்றிதழ் உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அங்கு தயராக்கப்படும் பொருளுக்கு தரம் மிக அவசியமாக உள்ளது. இந்த சர்டிபிகேட் இருந்தால் தான் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதோடு, லாபத்தை பெற முடியும் என்ற நிலைக்கு வியாபார நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது. தரத்தை உயர்த்தினால் ஐ.எஸ்.ஓ. எனும் உலகத்தர அங்கீகாரம் கிடைக்கின்றது. அதனால் மூலம் உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என்ற கொள்கையில் துவங்கப்பட்ட சர்வதேச தர நிர்ணய அமைப்பு தினம் 1969ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)