Skip to main content

அக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக? கே.சி.பழனிசாமி பதில்..!

Published on 28/09/2020 | Edited on 29/09/2020

 

admk

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் வரை நீடித்த செயற்குழு கூட்டம், பிற்பகல் நிறைவு பெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பி. முனுசாமி, 7 -ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள் என்று கூறினார்.

 

இதுகுறித்து, அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். 

 

வரும் 7 -ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறாரே?

 

சமீபகால அ.தி.மு.க வரலாற்றில் 5 மணி நேர கூட்டம் நடந்ததில்லை. அதுமட்டுமின்றி அவர்களிடம் ஒற்றுமையும் ஒருமித்தக் கருத்தும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் இன்றே அறிவித்திருப்பார்கள். அக்டோபர் 7 என்பதும்கூட இப்போதைக்குப் பிரச்சனையைத் தள்ளிவைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்களுக்குள்ளான இரகசிய சந்திப்புகள், டெல்லி தலைமை தலையீடு இவை எல்லாம் இருக்கும்.

 

k c palanisamy

 

டெல்லி தலையீடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களே?

 

மத்திய அரசை எதிர்ப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 -ஆம் தேதி வரை இந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை அவர்களுக்குள் நடந்து வருக்கிறது. அப்படி இருந்தும், அக்டோபர் 7 -ஆம் தேதி அறிவிப்பு என்பது அவர்கள் இந்தப் பிரச்சனையைத் தள்ளிதான் வைத்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இன்னும் முடிவுக்குவரவில்லை என்பதைதான் காட்டுகிறது. இன்னும் அவர்களுக்குள்ளான அணிதிரட்டல்கள், கொடுக்கல் வாங்கல், டெல்லி சிக்னல் இவை எல்லாம் இருக்கிறது.

 

admk

 

தலைமையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

 

இவர்கள் செயற்குழு கூட்டினார்கள். தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கட்சிக்காரர்கள் தேர்தலுக்கு எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப் பற்றி பேசினோம் என்று கூறிவிட்டு, 7 -ஆம் தேதி தான் முதல்வர் வேட்பாளர் பற்றி ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம் என்று தெரிவித்திருக்கலாம். இப்படி செய்திருந்தால், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அ.தி.மு.க.வின் மதிப்பு சிதைக்கப்படாமல் இருந்திருக்கும். இவ்வாறுகூட சொல்ல முடியவில்லை என்றால் இவர்கள் எப்படி மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை வளர்க்கப்போகிறார்கள். தொண்டர்களைத் திருப்தி படுத்தும் தகவலைக்கூட இவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை. மேலும் அ.தி.மு.க.வின் தொண்டர்களைச் சோர்வடையவைக்கும் நிகழ்வு இது. ஆகஸ்ட் 15 -ஆம் தேதி வந்த பிரச்சனையையே தொண்டர்கள் விரும்பவில்லை. 

 

admk

 

7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று நம்பிக்கையில்லையா? 

 

பஞ்சாயத்து முடிந்தால் வரும். அப்படி முடியவில்லை என்றால் இன்னும் தள்ளிப்போகும். அதுக்குள் இன்னும் வெவ்வேறு பிரச்சனைகள் எங்கிருந்து எப்படி வரும் என்று தெரியவில்லை.

 

Ad

 

முதல்வர் வேட்பாளர் போட்டியில் இவர்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறார்களா? இல்லை வேறு யாராவது இருக்கிறார்களா?

 

நிச்சியமாக மறைமுகமாக வேலுமணி, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கே.பி.முனுசாமி ஒருவரை சிபாரிசு செய்வார். ஏன் நானேகூட கேட்கலாம். நான் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. இவர்கள் எல்லாம் சசிகலா வளர்ப்புதானே என்றார். 

 

கே.பி.முனுசாமி சொன்னப்படி முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க தலைமை அறிவிக்குமா? கே.சி.பழனிசாமி சொன்னதைப்போல் தற்போதைக்கு பிரச்சனையைத் தள்ளிவைக்க 7 -ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்கிறார்களா? என ர.ர.க்களும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினரும் விவாதித்து வருகின்றனர். 

 

 

 

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார்.