Skip to main content

குடியுரிமை சட்டத்தை பார்த்து காந்தியின் எலும்புகள் கூட அதிர்ந்திருக்கும் - வைகோ பேச்சு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019


கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவேசமாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "இன்றைக்கு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்தியாவின் மக்களை எல்லாம் ஒன்றினைத்து இணைந்த இந்த தேசத்தில் முஸ்லிம்கள் வாழக்கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். நான் இதுகுறித்து பாராளுமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறேன். இந்த சட்டத்தை கேட்டு கங்கை கரையில் கரைக்கப்பட்ட காந்தியின் எலும்புகள் கூட அதிர்ந்திருக்கும் என்று பேசினேன். இந்த நாட்டை சேர்க்க காந்தியார் அரும்பாடுபட்ட தேசத்தில், நாட்டை பிளக்க தற்போது சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். இதை இந்தியர்கள் யாரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனைவரது மனங்களிலும் ஒரு ஆறாத ரணத்தை இந்த சட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. 
 

hj



காந்தி இந்த தேசத்திற்காகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் பல்வேறு போராட்டங்கை முன் எடுத்தவர், அதில் வெற்றியும் பெற்றவர். குறிப்பாக இன்றை அரசாங்கம் சொல்லும் பலவற்றை எதிர்த்தவர். பசுவதை தடையை தான் வாழ்நாள் எல்லாம் எதிர்த்தவர். பசுக்களை ஏற்றுமதி செய்யும்போது அது இறைச்சிக்காக போகிறது என்று நமக்கு தெரியும்போது, எதற்காக பசுவதையை எதிர்க்க வேண்டும் என்று கேட்டர் காந்தி மகான். இன்று காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். என் நண்பர் பரூக் அப்துல்லா சிறையில் இருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களின் அவரின் சிறை தண்டணையை நீட்டித்து இருக்கிறார்கள். அவர் சிறுநீரக அறுவைச்சிகிச்சை செய்தவர். சிறையில் தொடர்ந்து வாடுகிறார். எல்லா இடங்களிலும் அவர்கள் வினையை விதைத்து விட்டார்கள். அதை எதிர்த்து இன்னொரு காந்தி வந்து போராட போவதில்லை. பகத் சிங்குகள் தான் வந்து போராடுவார்கள். இந்தியாவில் இத்தகைய படுபாதக செயலை செய்தால் இந்தியா அவர்களுக்கு அதற்கான விலையை கொடுக்கும்" என்றார்.