Skip to main content

சுட்டுக்கொல்லவேண்டும்! தெலுங்கானா, உன்னா, மால்டா, விழுப்புரம் அவலத்தால் தேசமெங்கிலும் வலுக்கும் கோரிக்கை

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

தெலுங்கானா, உன்னா, மால்டா, விழுப்புரம் என்று தேசமெங்கிலும் அவலம் தொடர்வதால், குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

 

j


தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவத்திலிருந்து மீள்வதற்குள், உன்னாவில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.   இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருக்கும்போதே, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மாந்தோப்பில் இளம்பெண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்  வீட்டில் தனியாக இருந்த பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

அடுத்தடுத்து பெண்கள் எரித்துக்கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

j

 

நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கி 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதால், தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற 4 பேரையும் கைது செய்து விசாரித்து வந்தபோது மக்கள் அலுத்துக்கொண்டனர்.  ஆனால், அந்த 4 பேரையும்  என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசாரை மக்கள்  பாராட்டி வருகின்றனர். 

 

என்கவுன்டருக்கு எதிர்ப்புகள் ஒருபுறம் வலுத்து வரும் நிலையில், ஆதரவும் குவிந்து வருகின்றன.   பொதுமக்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் என்கவுன்டருக்கு வரவேற்பு  தெரிவித்து வருகின்றனர்.

 

j


 
பிரியங்கா மரணத்திற்கு நியாயம் கிடைத்துவிட்டதாக அவரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில்,   உன்னாவில் எரித்துக்கொல்லப்பட்ட 23 வயது இளம்பெண்ணின் தந்தை, தன் மகளை எரித்துக் கொன்றவர்களை சுட்டுக்கொல்லவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் உன்னா சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றே கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

பொதுமக்கள் பலரும், குற்றவாளிகளை தெலுங்கானாவில் நடந்தது போல் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறார்கள்.  இக்குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, குற்றவாளிகளை ஒருமாதத்தில் உத்தரபிரதேச அரசு தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தி வருகிறார்.  

 

உன்னா விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டி உ.பி. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Next Story

உ.பியில் தொடரும் அவலம்; இரண்டு சிறுமிகள் மர்ம மரணம்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

unnao incident

 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பட்டியலின சிறுமிகள் மூவர், கால்நடைகளுக்கு உணவு சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள வயல்வெளியில் மூவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்தபோது, இருவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. ஒரு சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மூன்று சிறுமிகளின் கைகளும் கட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அம்மாநில காவல்துறை இதனை மறுத்துள்ளது. மேலும் சிறுமிகளுக்கு விஷம் அளிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர், "முதல்கட்ட தகவலின்படி, சிறுமிகள் புல் வெட்ட சென்றிருந்தனர். விஷத்தின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, கண்ணால் பார்த்தவர்கள் மற்றும் மருத்துவரின் கருத்துப்படி, அந்த இடத்தில் நிறைய நுரை காணப்பட்டது. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட தகவலின்படி உடல்களில் எந்தக் காயமும் இல்லை. விசாரணைக்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் உள்ள சிறுமிக்கும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

உன்னாவ் வழக்கு; முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு மேலும் பத்தாண்டுகள் சிறை...

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Kuldeep Sengar Gets 10 Year Jail

 

 

உ.பி., உன்னாவ் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பான வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். மேலும், இந்த வழக்கில் குல்தீப், அவரது சகோதரர், இரண்டு காவலர்கள் உட்பட ஆறு பேருக்கு இந்த சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கர் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.