Skip to main content

அவங்க கருப்பு சட்டை...நாங்க வெள்ளை சட்டை... கிருஷ்ணசாமி Vs ஜான்பாண்டியன்..!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதை போலத் தான் ஒரே சமூகத்தை சேர்ந்த 2 அரசியல் தலைவர்கள் எதிரும் புதிருமாக நிற்பது, நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இலக்கை எட்ட முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள்.

ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, இந்த சமூகத்தினரால் பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்றிட வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை.

 

they are black shirt ... we are white shirt ... Krishnaswamy Vs Johnfandian ..

 

இதுகுறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறையின் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், ஆதி திராவிடர் நல இயக்குநரை உறுப்பினர் - செயலராகவும் கொண்ட ஒரு குழுவை  தமிழக அரசு அமைத்திருக்கிறது.

இதனாலேயே, ஏப்ரலில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்,  ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெற்றிருந்தது. தேர்தல் முடிந்த பிறகு அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலேயே, கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறியது. இடைத் தேர்தல் நடந்த நாங்குநேரி தொகுதியில், இந்த சமூகத்து மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள். இதனாலேயே, வாக்கு பதிவு சதவிகிதம் குறைந்தது. ஒரு வேளை அந்த மக்கள் ஓட்டுப் போட்டிருந்தாலும், அது காங்கிரசுக்கு கொஞ்சம் கூடுதல் வாக்குகளை பெற்று தந்திருக்கும். அதிமுக வேட்பாளருக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்திருக்கும்.

இடைத் தேர்தலுக்கு முன்பாக கிருஷ்ணசாமியிடமும், ஜான் பாண்டியனிடமும் ஆளுந்தரப்பு பேச்சு நடத்தியது. ஆனால், 2 கட்சிகளும் பிடி கொடுக்கவில்லை. இதனால், தேர்தல் முடிந்த பிறகு 'தேவேந்திர குல வேளாளர்' என்ற அரசாணை கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க "இனியும் நாங்கள் காத்திருக்க மாட்டோம். எங்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் அரசை ஸ்தம்பிக்கிற வகையில் போராட்டம் நடத்திடுவோம். எம் சமுதாய மக்கள் 90% பேர் என் பின்னாடி உள்ளனர். தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடும் வரை பொது வெளியில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்போம்" என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

they are black shirt ... we are white shirt ... Krishnaswamy Vs Johnfandian ..



புதிய தமிழகம் கட்சியினரோ, "நாங்கள் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வெள்ளை சட்டை அணிந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவோம்" என்று அறிவித்துள்ளனர்.

 

they are black shirt ... we are white shirt ... Krishnaswamy Vs Johnfandian ..

 

இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அந்த சமூகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இளைஞர் கார்த்திக்கோ.,. "தேவேந்திர குல வேளாளர் அரசாணையை இந்த அரசாங்கம் வெளியிடாது என்பது, கிருஷ்ணசாமிக்கும் தெரியும், ஜான் பாண்டியனுக்கும் நல்லா தெரியும். இருந்தாலும் அரசியல் பண்ண வேண்டும் என்பதற்காக கறுப்பு சட்டை, வெள்ளை சட்டை என கூறி வருகின்றனர். இவங்க வெள்ளை சட்டைபோட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதற்கு அப்புறம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி அரசாணை பெறுவதற்கு, இப்போது பதவியில் உள்ள இந்த சமூகத்து எம்.எல்.ஏக்கள் 14 பேரை (4 திமுக, 1 காங்., 9 அதிமுக) ராஜினாமா செய்ய சொல்லி அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், அந்த 14 எம்.எல்.ஏக்களும் இதற்கு சம்மதிக்க மாட்டாங்க. இது தான் எதார்த்தம். சும்மா பெயருக்கு அரசியல் பண்ணுவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை" என்றார்.

 

 

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“முதல்வர் மத்தியிலும் கூட்டணியை ஏற்படுத்த வேண்டும்” - கிருஷ்ணசாமி வேண்டுகோள்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

"Alliance should be established among the Chief Ministers" Krishnaswamy requested

 

"பா.ஜ.க.வை வீழ்த்த தேசிய அளவில் கூட்டணி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "உழைப்பு என்றால் அது நமது முதலமைச்சர்தான். உழைப்பு உழைப்பு உழைப்பு. அந்த எழுத்துக்கு முழு உரிமை படைத்தவர்தான் நமது முதலமைச்சர். எடுத்தவுடனேயே இந்த உயரத்திற்கு அவர் வரவில்லை. எத்தனையோ  போராட்டங்கள், தியாகங்கள் செய்துதான் வந்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக வந்து ஒன்றரை  ஆண்டுக்குள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்.

 

அத்துடன், புதுப் புது திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இன்று தமிழகத்தை இந்திய துணைக் கண்டமே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். தொலைக்காட்சிகளை பார்த்தால், செய்தித் தாள்களை படித்தால் முதலமைச்சரின் திட்டங்கள், தொடக்க விழாக்கள் என அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். எதிர்க்கட்சியினர் கூட இப்படி உழைக்கிறாரே என்று சொல்கிறார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் எட்டு அடி பாய்ந்தார் என்றால் அவருடைய மகன் நமது முதலமைச்சர் 80 அடி பாய்கிறார். எதிர்க்கட்சி தலைவர்களை கூட எதிரிகளாக பார்க்காமல் அவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் பாங்கை பார்க்கும்போது பிரமித்து போயிருக்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரின் செயல்பாடுகளை கண்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராட்டுகிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு உரிய நிதிகளை கொடுக்காமல் ஆளுநர் மூலம் அடக்கி ஆள நினைக்கிறது. மாநில உரிமையை பேணிக் காத்து சரியான பதிலடி கொடுத்து வருகிறார் நமது முதலமைச்சர்.

 

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தலைவர்கள் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் அமைக்கவிருக்கிறார்கள். அந்த வியூகத்தின் முதல் தளபதியாக நமது முதலமைச்சர்தான் இருப்பார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணியை சிறப்பாக இன்று வரை வழிநடத்தி செல்கிறார். நாளையும் வழிநடத்தி செல்வார். தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை கூட்டணி போல் மத்தியிலும் கூட்டணியை நம் முதல்வரே முன்னின்று ஏற்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சூளுரையாக சபதம் ஏற்று, மத்தியில் ஆளும் பா.ஜ.கவை விரட்ட வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன். மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தநாள் காணும் நமது முதலமைச்சர் உடல் ஆரோக்கியத்தோடு மேலும் மேலும் நல்ல புகழும் பெருமையும் கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்." என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணசாமி.