Skip to main content

"ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுங்க; திரை கட்டாதீங்க" - வழக்கறிஞர் தமிழ்வேந்தன்!

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Tamil Vendan Interview

 

ஜி20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தன் நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

உதயநிதி பேசியதற்கு சங்கி கூட்டம் கதற வேண்டும். அதுதான் சரி. 20,000 புத்தகங்கள் படித்து கற்றறிந்தவர் அண்ணாமலை. சனாதன தர்மம் குறித்து பாடப் புத்தகத்தில் இருக்கும் வரிகளை அவர் கோடிட்டு காட்டுகிறார். அதற்கு முன்பு அது அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம் என்று சொல்லும் நிலையில், பாஜகவுக்கு அடிமையாக இருந்து ஆட்சி நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதுகுறித்து தெரிய வாய்ப்பில்லை. 

 

பார்ப்பனிய கூட்டத்துக்கும் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மேய்த்துக்கொண்டு வந்தவர்கள் அவர்கள். அப்போது நாடு நம்மிடமும் ஆடு மாடுகள் அவர்களிடமும் இருந்தது. இப்போது நாடு அவர்களிடமும் ஆடு மாடுகள் நம்மிடமும் இருக்கிறது. அறிவாளியாக இருந்த தமிழ் சமூகத்தில் விஷத்தைப் பரப்பியது அவர்கள்தான். தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு தீமைகளை சமுதாயத்தில் புகுத்தினர். தமிழ் கலாச்சாரம் தான் இந்தியா முழுமைக்கும் பரவியது. 

 

பார்ப்பனர்களுக்கு தனியாக கலாச்சாரம் என்கிற ஒன்று இல்லை. முருகர் தமிழ் கடவுள். அவருடைய கோயில்களையும் இப்போது பிராமணர்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். ஞானப்பழம் விவகாரத்தில் முருகர் அப்போதே கம்யூனிஸ்ட் போல் போராட்டம் செய்தவர். அனைவரும் இங்கு ஒன்றுதான் என்று சொல்கிறது தமிழ்மறை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். ஜி20 மாநாட்டின்போது ஏழைகள் வசிக்கும் பகுதிகளை திரை வைத்து மறைக்கிறார்கள். நியாயமாக அந்த மக்களுக்கு இவர்கள் புதிய வீடுகளைக் கட்டித் தந்திருக்க வேண்டும். 

 

மோடியின் ஆட்சி எப்போது முடியும் என்கிற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. அவர் சீக்கிரமாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் நடக்கட்டும். அந்தக் காலத்தில் பெண்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உடன்கட்டை ஏறினார்கள் என்கிறார் அண்ணாமலை. கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உண்டானது அல்ல. அது ஆண்களுக்கும் இருக்கிறது. மனைவி இறந்தால் ஆண்கள் ஏன் உடன்கட்டை ஏறவில்லை? இதுதான் சனாதனம். இதை வெள்ளைக்காரர் வெல்லஸ்லி பிரபு காட்டுமிராண்டித்தனம் என்று கூறினார்.
 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mikjam storm damage; Funded by actor Sivakarthikeyan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நம்மை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“அந்த கேள்வியை மக்களிடம் கேளுங்கள்” - எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி பதில்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
minister Udayanidhi's response to opposition criticism for cyclone michaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “6 நாட்களாக நாங்கள் மக்களுடன்தான் இருக்கின்றோம். புயல் அடித்தபோதும் சென்னை மேயர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் களத்தில்தான் இருந்தோம். நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் ஒன்னும் வீட்டில் படுத்துக்கொண்டோ ஒளிந்துகொண்டோ இருக்கவில்லை. அதனால், அந்த கேள்வியை மக்களிடம் போய் கேளுங்கள்” என்று கூறினார்.