/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfjkf-hsodaf-hdio-f.jpg)
எந்த மிருகம் எப்போது பாயும்
எதுவும் புரிய வில்லை -இங்கு
எவனுரு வத்தில் எங்கள் மரணம்
அதுவும் தெரிய வில்லை.
சொந்த ஊரெனும் சுதந்திரம் கூட
எமக்குக் கிடைக்க வில்லை;
சுடரும் விழியில் பெருகும் நீரை
வாழ்க்கைத் துடைக்க வில்லை.
உடம்பெனும் ஒன்றைப் பெற்றது தவிர
வேறென்ன தவறு செய்தோம்-அதில்
உயிரும் உணர்வும் தரித்தது தவிர
வேறென்ன தவறு செய்தோம்?
படிப்பதும் பணிக்குச் செல்வதும் தவிர
வேறென்ன தவறு செய்தோம்?-உமை
நம்பிப் பிறந்து வளர்ந்தது தவிர
வேறென்ன தவறு செய்தோம்!
உடல்வெறி கொண்டு உலவிடு வோரின்
இதயம் தசையா இரும்பா?-அவர்
உயிரைக் கிழித்துச் சாறு பிழிய
எம்முடல் உணர்வறு கரும்பா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
அடங்கா ஆசை என்னும் பெயரில்
ஆவி பறிப்பதும் தகுமா?-இந்த
அவலம் தொடரின் எம்முளத் தீயிடம்
உலகின் சாம்பலும் மிகுமா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)