Skip to main content

கொரோனா... சீனாவுக்கு கைகொடுக்கும் தமிழ் மருத்துவம்!  

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 

சென்னையைச் சேர்ந்த  தமிழ் சித்த மருத்துவரான கா.திருத்தணிகாசலம்,  கடந்த முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பலவகை நோய்களை முழுதாகத் தீர்த்து, பலரையும் ஆச்சரியப்படுத்தில் ஆழ்த்தி வருகிறார். அப்பப்பட்டவர் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கிய உடனேயே, அதன் அறிகுறிகளையும் விளைவுகளையும் மருத்துவ நுண்ணறிவால் இனங்கண்டு,  ”இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த நான் சீனாவுக்கே சென்று இலவச சிகிச்சை தரத் தயார்” என்று உயிர் பயமில்லாமல் அறிவித்தார்.
 

Tamil medicine


 

அறிவிப்போடு நின்றுவிடாமல், சீன அரசையும் தொடர்புகொண்டு இது குறித்து விவரித்தார்.   மேலும் இந்த கொடிய உயிர்க்கொல்லி நோயிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்போடு, செலவைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல்,  ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா.சபைக்கே சென்று, உயிர்க்கொல்லி நோய்களை தொன்மை பலமுள்ள தமிழ் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும்” என்று அறிவித்தார்.  
 

இதற்கிடையே இவரின் தமிழ் சித்த மருத்துவக் குறிப்புகளைப் பரிசோதித்துப் பார்த்த  சீன மருத்துவர்கள்,  அந்தத் தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை  உணர்ந்து, அதைக் கையில் எடுத்த சீனா, இப்போது கொரோனா கட்டுபடுத்தப்பட்டதாகவும் பெரும்பாலோர் குணமடைந்துவிட்டதாகவும் உற்சாகமாக அறிவித்திருக்கிறது.

 

Tamil medicine



 

இதுபற்றி விவரிக்கும்  திருத்தணிகாசலம் “ கொரோனா விபரீதங்கள் என்னை உலுக்கியதால், பிப்ரவரி 14-ந் தேதி  டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்தேன். அவர் ஆயுஷ் அமைச்சரை சந்திக்கச் சொன்னார். இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி. இராஜாவையும் சந்தித்தேன். அவர், அவர் சீனத் தூதரைத் தொடர்புகொண்டார். சீனத் தூதர் அரைமணி நேரத்தில் தங்கள் தூதரக அறிவியல் துறை ஆலோசகருடன் என்னை சந்தித்தார் . என் மருத்துவமுறை பற்றி ஆர்வமுடனும் ஆச்சர்யத்துடனும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். என் மருத்துவ விளக்க அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டார். அவற்றை தங்கள் TCM (traditional Chinese medicine board) மூலம் பரிசோதித்துவிட்டு பதில் தருகிறோம் என்று கூறினார். 15 நாட்கள் கழித்து உங்கள் மருத்துவமனையுடன் சேர்ந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புகிறோம் என்ற செய்தி சீனத் தூதர் மூலம் வந்தது. நான் குறிப்பிட்ட நம் தமிழ் மருந்தான சித்த மருந்தை இப்போது சீனா, கையில் எடுத்ததோடு, உலகம் முழுதும் உள்ள கொரோனோ நோயாளர்களுக்கு தம் மருத்துவர்கள் மூலம் மார்க்கெட்டிங் செய்துகொண்டிருக்கிறது” என்று ஆச்சரியமூட்டுகிறார்.
 

இந்தியாவில் கொரோனா மருத்துவத்தில் இறங்கவில்லையா? என்ற கேள்வி எழலாம். இது குறித்தும் அவரே சொல்கிறார்...

 

Tamil medicine


 

”இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனை  டெல்லியில் சந்தித்தேன். நீங்கள் ஆயிஷ் அமைச்சரை சந்தியுங்கள் என்றார். ஆயுஸ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், கோவாவில் இருப்பதை அறிந்து அங்கு சென்று  அவரையும் சந்தித்தேன். இதுகுறித்து எங்களுடைய ஆயுஷ் டெக்னிக்கல் டீமோட பேசுகிறேன் என்று சொன்னார்.  மார்ச் 4 ஆம் தேதி மீண்டும் அமைச்சரை அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டேன். மறுநாள், மருந்தோடு டெல்லியில் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார். உடனடியாக  டெல்லி சென்றேன். சொன்னபடியே  ஆயுஷ் அமைச்சரை சந்தித்தேன். கால் மணி நேரம் மருந்துகளைப் பற்றியும் அந்த மருந்து வேலை செய்யும் முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
 

இதற்கிடையில் இந்த கொரோனோ வைரஸ் சிகிச்சை குறித்து ஐநாவில் பேசுவதற்கான அழைப்பு எனக்கு வந்தது.  உடனே ஜெனிவா சென்று ஐ.நா. அவையில் நம் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் சித்த மருத்துவ முறை மூலம் வைரஸ் காய்ச்சலை குணமாக்க முடியும் என்று அங்கே நான் அழுத்தமாகப் பதிவு செய்தேன்.
இந்த நேரத்தில், டெல்லியில் இருந்து உள்துறை அதிகாரி  ஒருவர் தொடர்புகொண்டு, உடனே டெல்லி வாருங்கள் என்றார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே உள்ள அதிகாரியுடன் நான் இது குறித்து பேசினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியோடு என்னை பல்வேறு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார்.


 

எனக்கு மொழிப் பிரச்சனை இருக்கிறது என்பதால் தமிழ் தெரிந்த ஒரு அதிகாரியை என்னோடு அனுப்பி வைத்தார். முதலில் சுகாதாரத்துறை இயக்குநரை  சந்தித்தேன். அவர் என் ம ருத்துவ அறிக்கைகளைப் பார்த்த்துவிட்டு,  நாங்கள் கொரோனா நோயாளர்களைக் கொடுப்பதில் எந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த மருந்துகளை சாப்பிடுவதற்கான அனுமதியை நீங்கள் ஆயுஷ் துறைகளிடம் இருந்து பெற்று வாருங்கள் என்றார். அதன் பிறகே ஆயுஷ் இயக்குனரை சந்தித்தேன் நீங்க சித்தா பிரிவில் இருந்து அனுமதி வாங்குங்கள் என்று கூறினார். சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவை அணுகினேன். அதற்கு அவர்கள், எங்கள் இயக்குனர் அலுவலகம் சென்னையிலும் உள்ளதே, அங்கே   செல்லுங்கள் என்றார்கள். உடனே ஆர்வமாக சென்னைக்குத் திரும்பி  இயக்குநரை சந்தித்தேன். அவரும்,  இந்த மருந்தை அனுமதிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு முன்பாக அனிமல் ஸ்டடி செய்து விடுங்கள். அதற்குப் பிறகு அனுமதி பெற்று ஹியூமன் ஸ்டடி செய்து விடுங்கள். அதற்கு பிறகு இந்த மருந்துகளை கொரோனோ நோயாளர்களிடம் தந்து, அந்த அறிக்கையையும் இணைத்து இதற்கான அனுமதியை வழங்குகிறேன் என்று கூறினார். இப்போது அவர் சொன்னபடி அனிமல்ஸ் ஸ்டடி முடிப்பதற்கான ஏற்பாடுகள் இறங்கியுள்ளேன்.”என்றார் சற்றே நிதானமாக.
 

நல்லவை நிகழ நம்பிக்கையோடு காத்திருப்போம். 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.