Skip to main content

ராணுவத்தில் மதரீதியில் பிளவா? முஸ்லிம்கள் வேதனை!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

இந்திய ராணுவத்தில் மதப்பிரிவினைகள் ஏதும் இல்லை. இங்கு அனைத்து மதத்தினரும் ஒரே குடையின்கீழ்தான் இயங்குகிறார்கள் என்று இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு தெரிவித்துள்ளார்.

 

இந்திய ராணுவத்தை மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையில் இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்திய ராணுவத்தையே இழிவுபடுத்தும் கருத்துகளையும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் சமீபத்தில் வெளியிட்டார். இந்திய ராணுவத்தின் வேலையை ஆர்எஸ்எஸ் மூன்றே நாட்களில் செய்துவிடும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பிறகு, தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்துள்ளார்.

 

Army

 

அவருடைய பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைஸி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்தியாவில் உள்ள இந்துத்துவ அமைப்பினர், முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானியர்கள் என்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் எங்களை முஸ்லிம்களாக பார்ப்பதில்லை. இந்தியர்களாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் எங்களையும் சுட்டுக் கொல்கிறார்கள். சுன்ஜுவான் என்ற இடத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 7 பேரில் 5 பேர் முஸ்லிம்கள் என்று அவர் கூறியிருந்தார்.

 

இதையடுத்து, இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை மத அடிப்படையில் மதிப்பிடும் போக்கு ராணுவத்தில் இல்லை. மத அடிப்படையில் பாகுபாடு இருப்பதாக பேசுகிறவர்கள், ராணுவத்தைப் பற்றி நன்றாக தெரியாதவர்கள் என்றார் தேவராஜ் அன்பு. இந்திய வீரர்கள் அனைவருமே உண்மையான தேசபக்தர்களாத்தான் செயல்படுகிறார்கள். 

 

இந்துத்துவாவாதிகளின் அரசியலுக்காக ராணுவத்தையே மத அடிப்படையில் விமர்சிக்கிற போக்கு தொடங்கியுள்ளது. ஆனால், ராணுவத்தில் அந்த உணர்வு தலைதூக்க வாய்ப்பில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல்தான்.