Skip to main content

ரவுடி குழுவுக்கு பயப்படும் அதிபர். – இவ்வளவு மோசமாவயிருக்கு இலங்கை...

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
sirisena


 

என்னை கொலை செய்ய முயல்கிறது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்கிற குற்றச்சாட்டை தனது அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார் இலங்கை அதிபராக உள்ள மைத்திரிபாலா சிறிசேனா. இந்த தகவல் செய்தியாக வெளியாக தற்போது சர்வதேச அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் நாமல்குமாரா என்பவர் ஒரு வாரத்துக்கு முன்பு, கொழும்பில் உள்ள போலிஸ் அதிபரிடம், ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவின் உயர்அதிகாரி நாலகசில்வாவுடன் சிலர் சேர்ந்துக்கொண்டு, அதிபர் மைத்திபாலா சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் விசாரிக்கவும் என புகார் கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தேசிய குற்ற புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியது. விசாரணை தொடங்கியதும், குற்றம் சாட்டப்படும் அந்த போலிஸ் அதிபர் இடைக்கால பணி நீக்கம் செய்ய வேண்டும்மென சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் மத்துமபண்டாரா, தேசிய போலிஸ் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்தது போலிஸ் துறை.இந்த விசாரணை நடந்துக்கொண்டு இருக்கும்போதே இலங்கை போலிஸார் கொழும்புவில் ராஜேந்திரகுமார் என்கிற நபரை கைது செய்தனர். இவர் 2015 க்கு முன்பு இந்தியாவில் இருந்து அரசியல் புகலிடம் தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.  உண்மையில் அவர் அரசியல் புகலிடம் தேடிவரவில்லை. இந்தியாவின் வெளிநாட்டு உளவுப்பிரிவான ரா வின் ஏஜென்டாக வந்துள்ளார் என தெரிந்து கைது செய்து விசாரித்தபோதுதான், இலங்கை அதிபர், முன்னாள் அதிபர், பாதுகாப்பு செயலாளரை ரா கொலை செய்ய திட்டமிடுகிறது என்கிற தகவல் தெரிந்து அதிபருக்கு தெரியவந்துள்ளது என்கிற தகவலை மீடியாக்களிடம் கூறினார் எம்.பி விமல் வீரவங்சா. அதோடு, அவர் ரா உளவாளி என்னை சந்திக்கவே இரண்டு முறை முயன்றுள்ளார், ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.


 

raw
இந்த பரபரப்புகளுக்கு இடையில்தான் இலங்கை அரசு வாரந்தோறும் அதிபர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் கடந்த அக்டோபர் 16ந்தேதி அதிபர் மைத்திரிபாலாசிறிசேனா தலைமையில் நடந்துள்ளது. அந்தக்கூட்டத்தில் என்னை கொலை செய்ய இந்தியாவின் ரா அமைப்பு சதி செய்துள்ளது என அதிபர் பேசியுள்ளார். மற்ற அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்கிற தகவல் அதிபர் மாளிகையில் இருந்து பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டது. இது மறுநாள் செய்தியாக வெளியாக உலக அரங்கம் பரபரப்பானது. இந்த செய்தியால் அதிர்ச்சியான இந்திய பிரதமர் மோடி உடனடியாக, இலங்கை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதே நேரத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் தரம்சித்சிங் இலங்கை அதிபரை நேரில் சந்தித்து பேசிவிட்டு கிளம்பியதும், அப்படியொரு பேச்சை அமைச்சரவை கூட்டத்தில் பேசவில்லை என அமைச்சரவை தொடர்பான செய்திகளை தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்னா அக்டோபர் 17ந்தேதி மதியம் செய்தியாளர்களிடம் மறுத்தார்.


சிறிது நேரத்தில் அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக் செய்தியாளர்களிடம், தன்னை கொலை செய்ய ரகசிய அமைப்புகள் சதி திட்டம் தீட்டியுள்ளன என பேசினாரே தவிர இந்தியாவின் ரா அமைப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லை என மறுத்தார்.


முதலில் இல்லை என்றார்கள், பின்னர் பேசினோம் என மாத்தி மாத்தி பேசி மழுப்பினார்கள். வரும் 20ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா வந்து பிரதமர் மோடி, அமைச்சர் சுஷ்மாசுவராஜ் போன்றோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் அதிபரின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.


இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆசிய பிராந்தியத்தில் நடந்துவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதிகாரத்தில் உள்ளவர்களில் இந்தியா ஒருதரப்பை கவர் செய்து வைத்திருந்தால், சீனா ஒரு தரப்பை கவர் செய்து வைத்திருக்கும். அப்படி இலங்கையில் அதிபர் சிறிசேனா சீனா ஆதரவாளராகவும், பிரதமர் ரணில்விக்ரமசிங்கே இந்திய ஆதரவாளராகவும் உள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


 

sirisenaகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தரவேண்டும்மென பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே கூறியதாகவும், இதற்கு எதிர் நிலைப்பாடு அதிபர் கொண்டுள்ளார். இதேபோல் பல விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அதிபர் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது அதிருப்தியில் உள்ளது. இதை அறிந்தே உள்ளார் அதிபர். அதோடு அவருக்கு நாட்டில் எதிர்ப்புகளும் அதிகமாக உள்ளன. இதனால் அச்சத்தில் உள்ள அதிபர், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் செயல்படும் ஆவா குழுக்களுக்கு இந்தியா ஆயுதம், பணம், பயிற்சி வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் தனக்கு ஆதரவான எம்.பிக்கள் மூலமாக பேசவைத்து அரசியல் செய்துள்ளார் என்கிறார்கள்.


ரா அமைப்பு.


இந்தியாவின் சார்பில் வெளிநாடுகளில் இயங்கும் புலனாய்வு அமைப்பு தான் ரா. ( ரிசர்ச் அனலைஸ் விங்க் என்பதன் சுருக்கமே RAW) இந்த அமைப்பு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மிரட்டல், தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியாவுக்கு எதிராக உருவாகும் சதித்திட்டங்களை புலனாய்வு செய்வதே இதன் பணி. இந்தியாவுக்கு எதிராக இருப்பவர்களை அடக்குவது, எதிர்த்தால் அழிப்பது என்பது கூடுதல் வேலை. இப்படியொரு அமைப்பு எல்லா நாட்டு உளவுத்துறையிலும் உண்டு. அமெரிக்காவுக்கு சிஐஏ, இஸ்ரேல்க்கு மொஸாட், பாகிஸ்தானுக்கு ஐ.எஸ்.ஐ உள்ளது. இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையிலான முதல் யுத்தத்தில் இந்தியாவின் தோல்விக்கு பின் உருவானது தான் ரா. அப்போது முதல் பலப்பல வெளிநாட்டு ஆப்ரேஷன்களில் ஈடுப்பட்டுள்ளன. சிலப்பல வெற்றி, சிலப்பல தோல்வி. சமீபத்தில் வெளிநாட்டு தேர்தல் ஒன்றில் கவனம் செலுத்தி இந்தியாவுக்கு சாதகமான ஆட்சியை கொண்டு வந்துள்ளது என்கிற கருத்தும் ஏற்பட்டுள்ளது.


ரா அமைப்பை பார்த்து இலங்கை அதிபர் பயப்படக்காரணம், ஒருக்காலத்தில் இலங்கை சிங்கள அரசை 25 வருடங்களாக நெருப்பின் மீது நடக்கவைத்த விடுதலைப்புலிகள் என்கிற அமைப்புக்கு பயிற்சி தந்து ஆக்கமும், ஊக்கமும் எல்லா விதத்திலும் தந்தது ரா தான். இலங்கையில் சுமார் 40 ஆண்டுகாலமாகவே ரா அமைப்பினர், துணி வியாபாரியாக, வர்த்தகராக, சுற்றுலாப்பயணியாக பலபல வடிவங்களில் இலங்கையில் தங்கி உளவு வேலை செய்துவருகின்றனர்.  ரா அமைப்பு நினைத்தால் இலங்கையில் ஒருவரை அரியணை ஏற்றும், இல்லையேல் இறக்கிவிடும். உதாரணம் முன்னால் அதிபர் ராஜபக்சே. இதை தெரிந்ததால் தான் தற்போதைய அதிபர் சிறிசேனா அலறுகிறார்.


ஆவாக்குழு ?.


இலங்கையில் செயல்படும் கூலிப்படை ஒன்றின் பெயரே ஆவாக்குழு. மாணிப்பால் கிருஷ்ணா குழு, வட்டுக்கோட்டை தில்லு குழு, சுன்னாகத்தில் சானா குழு என தமிழர்கள் பகுதியில் பல குழுக்கள் உள்ளன. சிங்களர்கள் பகுதியிலும் இப்படிப்பட்ட குழுக்கள் உள்ளன. அரசியல்வாதிகளின் பெரும் பலத்தோடு உள்ளனர். விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டு இருந்த காலத்திலேயே யாழ்ப்பானத்தில் தீனா குழு செயல்பட்டு வந்தது. அப்படிப்பட்ட ஒருக்குழு தான் ஆவாக்குழு.


இவர்கள் கையில் கத்தியோடு உலாவருவார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள், ஆள் கடத்தலில் இறங்கினார்கள் அது எதையும் போலிஸ் கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட குழுக்கள் கடந்த தேர்தலில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சேவே பயன்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். இந்த குழுக்கள் இப்போது போலிஸ், இராணுவத்தோடு நேரடியாக மோதுகிறார்கள். இது இலங்கையில் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திவருகின்றன. இதில் ஆவா குழுவினரின் கைகளில் தற்போது லேட்டஸ்ட் துப்பாக்கிகள் உள்ளனவாம். அதைக்காட்டியும், சுட்டும் மிரட்டுகிறார்களாம். இவர்களை இந்தியாவின் ரா அமைப்பு தன் நாட்டுக்கு அழைத்துச்சென்று பயிற்சி தந்து அனுப்புகிறது, இலங்கையிலும் ரகசியமாக பயிற்சி வழங்குகிறது என இலங்கை புலனாய்வு அமைப்பு அதிபருக்கு தகவல் தந்துள்ளது. அதோடு, உங்களை இந்த குழுவை வைத்தே கொல்லவும் முயல்கிறது இந்தியா எனச்சொல்ல அதுவே இத்தனை பூதாகரத்துக்கும் காரணமாகியுள்ளது.

 

Next Story

பிரதமர் மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
RSS leader who indirectly attacked PM Modi!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அந்த கருத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முன்னேற்றத்திற்கு எப்போதாவது ஒரு முடிவு உண்டா? நாம் நமது இலக்கை அடையும்போது, ​​இன்னும் செல்ல வேண்டியவை அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். திரைப்படங்களில் அவர்கள் அசாதாரண சக்திகளைக் கொண்ட சூப்பர்மேனைக் காட்டுகிறார்கள். எனவே ஒரு மனிதன் அத்தகைய சக்தியைப் பெற விரும்புகிறான். 

ஆனால், அவன் அதோடு மட்டும் நிற்கவில்லை. அதன்பிறகு தேவனாக விரும்புகிறான். ஆனால் தேவதாஸ்  நம்மை விட கடவுள் பெரியவர் என்று கூறுகிறார்கள். எனவே மனிதர்கள் கடவுளாக மாற விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால், பகவான் தன்னை ஒரு விஸ்வரூபம் என்கிறார். அதைவிடப் பெரியது எதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

வளர்ச்சிக்கு முடிவே இல்லை. எப்பொழுதும் அதிகமானவற்றிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருவர் நினைக்க வேண்டும். தொழிலாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் அதிகமாக பாடுபட வேண்டும். நிறைய வேலைகள் செய்ய வேண்டும். பல குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தாலும், கல்வி தேவைப்படும் என்ற புதிய தலைமுறை உருவாகி வருகிறது. வளர்ச்சி என்பது ஒரு தொடர் பணி. ஒரு தொழிலாளிக்கு நாம் இவ்வளவு செய்தோம், ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும். 

Next Story

7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
7 state by-election setback for the BJP alliance

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்தை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோன்று இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் 1 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் வகிக்கிறது. ஆனால், 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.