Skip to main content

"பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது; அதனால் கன்னியாகுமரியை குறி வைக்கிறார்" - ராம சுப்பிரமணியன் ஓபன் டாக்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

பக

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அன்றைய முதல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடைபெற்ற ஒன்று, அவருக்கு நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசியலில் தான் கை, கால், தலை என அனைத்தையும் நுழைப்பேன். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த இரண்டு சம்பவம் தொடர்பாகவும் மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:

 

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எடப்பாடி தரப்பு கூறியது போல் தனக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்று கூறியதையெல்லாம் அப்போதே யாரும் நம்பவில்லை. இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. முதல்வரிடம் கேட்டே காவல்துறையினர் இதைச் செய்திருப்பார்கள். இதையே தற்போது விசாரணை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைப் பற்றித் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம். அப்படி அது உண்மையாக இருந்தால் இவர் எதற்காக முதல்வராக இருக்க வேண்டும். அந்தப் பதவியை அசிங்கப்படுத்துவதைப் போல் இவரின் பேச்சு அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். 

 

இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மையாக இருந்தாலும் விசாரணை ஆணையம் தீவிர விசாரணைக்குப் பிறகு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த விசாரணை ஆணையம் தெரிவித்துள்ள நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். அதுவே பலியான மக்களுக்கு அரசு செய்கின்ற நேர்மையான உதவியாக இருக்கும்" என்றார்.

 

தமிழிசை தொடர்பாக பேசிய அவர், "தமிழிசை எங்கே இருக்க வேண்டும்,அவர் எங்கே இருந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் முழு நேரமும் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறார். ஏனென்றால் தெலுங்கானா அரசு இவரை எதற்கும் அழைப்பதில்லை. ஆளுநர் உரையாற்றக் கூட இவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உப்புக்குச் சப்பாணியாக அங்கு அவர் ஆளுநராக இருந்து வருகிறார். மேலும் இன்னும் சில காலத்தில் ஆளுநர் பதவி முடிவடையப் போகிறது. எனவே அவருக்கு தீவிர அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு அச்சாரமாகத் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை எல்லாம் அழைத்து புத்தகம் போடுகிறேன் என்ற வகையில் அவர்களோடு நட்புறவை ஏற்படுத்துகிறார். 

 

இதை விடப் பெரிய பதவி, ஏன் பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். இல்லை பெரிய அமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். அதற்கான முயற்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட விரும்புகிறார். குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார்.அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி தோல்வி அடைவதால் இவர் அங்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார். இல்லை என்றால் தென் சென்னையில் போட்டியிடும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. இதற்காகவே அவர் காய் நகர்த்தி வருகிறார். இதில் அரசியல் இல்லாமல் இல்லை" என்றார். 

 

 

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.