Skip to main content

ரஜினியிடம் வருத்தம் தெரிவித்த இன்ஸ்பெக்டர்! இன்ஸ்பெக்டரை கூல் பண்ணிய ரஜினி!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
Rajinikanth

 

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் சென்ற ரஜினிக்கு 100 ரூபாய் ஃபைன் போடப்பட்ட விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானது. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர் பழனி என்பவர், ரஜினியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருப்பதுதான் தற்போதைய ஹை-லைட்! 

 

சீட் பெல்ட் அணியாமல் ரஜினி கார் ஓட்டிச் சென்றாரா? இதில் மறைந்துள்ள உண்மை என்ன?

 

லாக் டவுன் காலத்தில் சென்னை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி. பண்ணை வீட்டுக்கு சென்று வருவதையும், அங்கு தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருவதையும் நக்கீரன் இணையதளத்தில் நாம்தான் முதன் முதலில் பதிவு செய்திருந்தோம்.

 

அப்படி செல்கிறபோது ரஜினியின் காரை அவரது டிரைவர்தான் ஓட்டிச் செல்வார். அப்படி ஒரு முறை செல்கிறபோது தாழம்பூர் சிக்னல் அருகே ரஜினியின் கார் மறிக்கப்பட்டது. டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததை கேள்வி எழுப்பினார் இன்ஸ்பெக்டர் பழனி.

 

காரை விட்டு கீழே இறங்கிய டிரைவர், சீட் பெல்ட் அணியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். கார் யாருடையது என்பது குறித்து இன்ஸ்பெக்டர் கேட்டபோது எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார் டிரைவர். அதேசமயம், இன்ஸ்பெக்டருக்கு தூரத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், ஆர்.டி.ஓ. அலுவலகத்துடன் இணைந்துள்ள தனது கையில் இருந்த எலெக்ட்ரானிக் சாதனத்தில் காரின் நெம்பரையும், 100 ரூபாய் ஃபைனையும் டைப் செய்ய காரின் உரிமையாளர் ரஜினிகாந்த் என்றும், காரின் மற்ற விபரங்களையும் சொன்னது. அந்த ரசிதை அப்படியே பிரிண்ட் எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நின்றிருந்த டிரைவரிடம் தந்தார் அந்த பெண் போலீஸ். அவரும் 100 ரூபாயை கட்டி விட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

 

இதுதான் நடந்ததே தவிர, சீட் பெல்ட் அணியாமல் ரஜினி கார் ஓட்டவில்லை. அவரது டிரைவர்தான் சீட் பெல்ட் போடாமல் காரை ஓட்டிச் சென்று ஃபைன் கட்டியுள்ளார். இது சர்ச்சையானதும் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பழனி. இந்த நிலையில், ரஜினியின் வீட்டிற்கு தொடர்புகொண்ட பழனி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விட்டு, “சாரிடம் பேச வேண்டும்” என சொல்ல, ரஜினிக்கு லைன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

ரஜினியிடம் பேசிய பழனி, தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். ரஜினியோ, “உங்களின் டூட்டியை செய்திருக்கிறீர்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை” என சொல்லி இன்ஸ்பெக்டரை பெருமைப்படுத்தியுள்ளார் என்கிறார்கள் ரஜினி குடும்பத்தினரோடு நெருக்கமான தொடர்பிலிருப்பவர்கள்.

 

 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.